திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்
வரிசை 389:
திருத்தந்தை பிரான்சிசு கிறித்தவ நற்செய்தி மகிழ்ச்சி கொணர்கின்ற ஒரு செய்தி என்றும், அதை அறிவிப்போரும் அந்த அறிவிப்பைப் பெறுவோரும் இறைவனின் மகிழ்ச்சியால் நிரம்பிட வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்ற ஒரு போதனை மடலை 2013, நவம்பர் மாதம் வெளியிட்டார். அந்தத் திருத்தூது மடலின் தலைப்பு [[நற்செய்தியின் மகிழ்ச்சி (மடல்)|நற்செய்தியின் மகிழ்ச்சி]] என்பதாகும்.
 
=="ஆண்டின் சிறந்த மனிதர்" விருது வழங்கப்படல்==
 
2013, திசம்பர் 11ஆம் நாளில், உலகப் புகழ்பெற்ற "டைம் வார இதழ்" ([[:en:Time Magazine|Time Magazine]]) திருத்தந்தை பிரான்சிசை "2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்" ([[:en:Time Person of the Year|Time Person of the Year]]) என்று அறிவித்து கவுரப்படுத்தியுள்ளது.<ref>[http://poy.time.com/2013/12/11/pope-francis-the-choice/ 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்]</ref>
 
திருத்தந்தை பிரான்சிசுக்கு இந்த விருது வழங்கியது எதற்காக என்று கேட்ட கேள்விக்கு "டைம்" இதழின் நான்சி கிப்சு (''Nancy Gibbs'') என்பவர் பின்வருமாறு பதிலிறுத்தார்:
<blockquote>திருத்தந்தை பிரான்சிசு உண்மையிலேயே "மக்களின் திருத்தந்தை" (''The People's Pope'') என்ற சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்ற 9 மாதங்களுக்கு உள்ளேயே, கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவரான திருத்தந்தை பிரான்சிசு உலக மனச்சாட்சியின் புதிய குரலாக மாறிவிட்டார்...மிகக் குறுகிய காலத்திலேயே உலக அரங்கில் முதியோர், இளையோர், ஆதரவாளர், ஐயப்பாடுடையோர் என்ற வேறுபாடின்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட பெருமை அவருக்கு உண்டு. எனவே, திருத்தந்தை பிரான்சிசை "2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளோம்.</blockquote>
==மேலும் காண்க==
*[[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது