அனைத்துலக நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை (3) using AWB
விரிவாக்கம்
வரிசை 16:
| footnotes =
}}
'''அனைத்துலக நீதிமன்றம்''' (International Court of Justice) என்பது, [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் [[நீதித்துறை]] சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது [[நெதர்லாந்து]] நாட்டின் தலைநகரான [[ஹேக்]]கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, [[ஹேக் அனைத்துலகச் சட்ட அக்கடமிஅக்காடமி]] என்னும் நிறுவனத்துடன் [[அமைதி மாளிகை]] (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல [[நீதிபதி]]கள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
 
ஐக்கிய நாடுகள் அவையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந் நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த [[நிரந்தர அனைத்துலக நீதிமன்றம்]] (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. [[அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம்]] என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும், அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல.
 
இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், [[ஐக்கிய நாடுகள் பொதுச்சபை]] ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த [[வழக்கு]]களையே இது கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், சிறப்பாக [[வளர்ந்துவரும் நாடுகள்]] மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் [[தடுப்பு வாக்கு]]ரிமைக்கு உட்பட்டது ஆகும்.
 
==அமைப்பு==
இதில் பதினைந்து நீதிபதிகள் பதவி வகிப்பர். ஒவ்வொருவருக்குமான காலம் ஒன்பது ஆண்டுகள். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து நீதிபதிகள் என்ற அளவில் தேர்தல் நடைபெறும். பதவியில் இருக்கும்போதே ஒருவர் இறப்பார் எனில், அவருக்கு மாற்றாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை தேர்வு செய்யக் கூடாது. இந்த அமைப்பு தொடங்கியதில் இருந்து இன்றுவரை, பாதுகாப்பு குழுவில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளை கொண்டிருக்கின்றன.
சீனா மட்டும் சில ஆண்டுகாலத்திற்கு தன் நாட்டு நீதிபதியை இந்த குழுவில் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்சு, ரசியா உள்ளிட்ட நாடுகள் அனைத்து தடவைகளிலும், தங்கள் நாட்டு நீதிபதிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் கொண்டிருந்தன.
இந்த அமைப்பின் சட்டத்தின்படி, “நாட்டின் அடிப்படையில் அல்லாமல், உயர்ந்த குணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.” இதில் பதவியில் உள்ல நீதிபதிகள் பிற இடங்களில் பணியாற்றக் கூடாது என்பது விதி.
 
==சான்றுகள்==
 
{{ஐக்கிய நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது