திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்
சி சேர்க்கை
வரிசை 394:
 
திருத்தந்தை பிரான்சிசுக்கு இந்த விருது வழங்கியது எதற்காக என்று கேட்ட கேள்விக்கு "டைம்" இதழின் நான்சி கிப்சு (''Nancy Gibbs'') என்பவர் பின்வருமாறு பதிலிறுத்தார்:
 
<blockquote>{{cquote|திருத்தந்தை பிரான்சிசு உண்மையிலேயே "மக்களின் திருத்தந்தை" (''The People's Pope'') என்ற சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்ற 9 மாதங்களுக்கு உள்ளேயே, கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவரான திருத்தந்தை பிரான்சிசு உலக மனச்சாட்சியின் புதிய குரலாக மாறிவிட்டார்...மிகக் குறுகிய காலத்திலேயே உலக அரங்கில் முதியோர், இளையோர், ஆதரவாளர், ஐயப்பாடுடையோர் என்ற வேறுபாடின்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்ட பெருமை அவருக்கு உண்டு. எனவே, திருத்தந்தை பிரான்சிசை "2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளோம்.</blockquote>}}
 
திருத்தந்தை பிரான்சிசு, வத்திக்கான் அரண்மனையின் சொகுசுச் சூழலில் வாழ்வதற்கு மாறாக சாதாரண விடுதியொன்றில் வாழ்வதற்கு முடிவுசெய்தார். உலகிலேயே மிகப்பெரிய கிறித்தவ திருச்சபையான கத்தோலிக்க திருச்சபை தன் நிர்வாகத்தில் காணும் குறைகளைக் களைய அவர் துணிச்சலுடன் செயல்படுகிறார். தவற்றினைச் சுட்டிக்காட்டும்போதும் ஆங்கே கனிவையும் இரக்கத்தையும் காட்டவேண்டும் என நினைவூட்டுகின்றார். ஏழைகளையும் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோரையும் அரவணைக்க மனித குலம் முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றார். இப்பின்னணியில் அவருக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கப்பட்டுள்ளது.
 
திருத்தந்தை பிரான்சிசுக்கு முன் வாழ்ந்த வேறு இரு திருத்தந்தையர்களுக்கும் "சிறந்த மனிதர்" விருது வழங்கப்பட்டது கருததத் தக்கது. அவர்கள் முறையே [[திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] (1962ஆம் ஆண்டு விருது), [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] (1994ஆம் ஆண்டு விருது) ஆவர்.
 
==மேலும் காண்க==
*[[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது