நிக்கதேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Crijn Hendricksz.jpeg|thumb|270px|இயேசுவும் நிக்கதேமும், [[Crijn Hendricksz]], 1616–1645.]]
{{editing}}
 
'''புனித நிக்கதேம்''' என்பவர் விவிலியத்தின் படி [[இயேசு]]வின் சீடராவார். இவர் ஒரு [[பரிசேயர்|பரிசேயரும்]] யூதத் தலைவர்களுள் ஒருவரும் ஆவார்.<ref>[[யோவான் நற்செய்தி]] :3:1</ref> இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. இரண்டாம் முறையாக இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் 'ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?' என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. இறுதியாக [[அரிமத்தியா யோசேப்பு]]வுக்கு இயேசுவின் உடலை [[இயேசுவை அடக்கம் செய்தல்|அடக்கம் செய்ய]] இவர் உதவியதாக கூறுகின்றது.
 
இவர் முதலில் இயேசுவை இரவில் சந்தித்து உரையாடியப்பகுதியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக [[யோவான் 3:16]] நற்செய்தியின் சுறுக்கம என அழைக்கப்படுகின்றது. மேலும் பல கிறித்தவ பிரிவுகளில் மீள்பிறப்புக் கொள்கை ([[:en:Born again (Christianity)|born again]]) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.
 
4ம் நூற்றாண்டின் மையத்தில் எழுதப்பட்ட திருமுறையினை சாராத ''நிக்கதேம் நற்செய்தி'' என்னும் நூல் இவரால் எழுதப்பட்டதாக கூறுகின்றது. ஆயினும் இது பின்னாட்களில் எழுதப்பட்ட போலி என்பது அறிஞர் கருத்து.
 
கிறித்தவ மரபுப்படி இவர் 1ம் [[நூற்றாண்டு|நூற்றாண்டில்]] மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/நிக்கதேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது