பிள்ளைத்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:
என சாம பேத தான தண்ட முறையில் அமைவது இப்பருவமாகும்.அவ்வாறு அழைக்கும் பொழுது சிலேடை முதலிய அணி இலக்கணங்கள் அழகுற அமைவதாகும்.
 
== ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியன ==
== ஆண்பாற்பிள்ளைத்தமிழுக்கு உரியது ==
=== 8. சிற்றில் இழைத்தல் / சிற்றில் சிதைத்தல் ===
ஓடியாடி சுற்றித்திரிந்து விளையாடும் குழந்தையின் பதினேழாம் திங்களில் இப்பருவம் பாடப்படுவதாகும். இதன் முந்தைய பருவத்தில் அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அதனைக் கட்டிய பெண்மக்கள், எல்லா! எம் சிற்றிலைச் சிதைக்க வேண்டா! என வேண்டுமுகமாகப் பாடப் படுவதே இப்பருவமாகும். மற்றா பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றொரும் பாடுவதாக அமைய இப்பருவம் மட்டும் சிறுமிகள் பாடுவதாக அமையும்.
 
=== 9. சிறுபறை முழக்கல் ===
ஆண்பாற் பிள்ளைத்தமிழின் ஒன்பதாவது பருவம் சிறு பறை முழக்கல் ஆகும். இது குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் நிகழ்வதாகும். இப்பருவத்தில் ஒலி இன்பங்கள் குழந்தையை மிகவும் ஈர்க்கும். ஆதலால் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து ஒலி முழக்குமாறு செய்து மகிழ்விப்பதே இப்பருவமாகும்.
 
=== 10 சிறு தேர்ப்பருவம் ===
ஆண்பால் பிள்ளைத்தமிழின் பததாவது பருவம் சிறுதேர்ப் பருவமாகும். இது 21-ம் திங்களில் நிகழ்வதாகும். மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப்பாடுவது இப்பருவமாகும். மட நடை பயிலும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடைப் பயிற்சிக்கு உதவும் பொருட்டு சிறு தேரினை ஓட்டி மகிழச் செய்வர். குழந்தை வளர வளர நடந்து செல்லுதல் மட்டுமின்றி தேர் முதலிய வற்றின்மீது ஊர்ந்து செல்லுதலையும் விரும்பும் இவ்விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தேர் முதலியவற்றினை உருட்டி குழந்தையை அமரச் செய்து மகிழ்வூட்டுவர். இது குழந்தையின் இருபத்தோராம் திங்களில் நிகழும் என்பது பொது இலக்கணம் ஆகும். ஆனால் 'இலக்கண விளக்கப்பட்டியல்' இப்பருவம் குழந்தையின் ஏழாம் ஆண்டில் நிகழும் எனக் கூறுகிறது.
 
== பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியன. ==
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளைத்தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது