பகவான்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==இரகசியத் துறவி== உத்தரப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:35, 12 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

இரகசியத் துறவி

உத்திரப் பிரதேசத்தில் 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர்.[1] நான்கு சம்பவங்கள் அத்துறவி போஸ்தான் என நம்பக் காரணமாகின.[2] அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இது பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார்.[3][4] ஆயினும், முகர்ஜி ஆணையம் மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதேவேளை, இந்திய அரசின் போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.

  1. Hindustantimes.com
  2. http://www.hindustantimes.com/news/specials/Netaji/iamsubash.shtml
  3. Hindustantimes.com
  4. "Ayodhya sadhu's writing matches Netaji's" Lucknow-Cities The Times of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவான்ஜி&oldid=1571767" இலிருந்து மீள்விக்கப்பட்டது