மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎பெயர்: *விரிவாக்கம்*
வரிசை 65:
மக்கெடோனியா என்ற பெயர் ({{lang-el|Μακεδονία}}, ''{{lang|grc-Latn|Makedonía}}'') "உயரமானவர்" அல்லது "மேட்டுவாசி" என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான {{lang|grc|μακεδνός}} (''{{lang|grc-Latn|Makednos}}'') என்பதிலிருந்து வந்தது. இங்குள்ள மக்களின் உயரத்தை ஒட்டி இவ்வாறு பெயரிடப்பட்டதாக கருதப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text.jsp?doc=Perseus:text:1999.04.0073:entry=makedno/s |title=Georg Autenrieth, A Homeric Dictionary, μακεδνός |publisher=Perseus.tufts.edu |date= |accessdate=2009-05-05}}</ref><ref>{{cite book|title = Etymologisches Wörterbuch des Griechischen
|author = Johann Baptist Hofmann |publisher = R. Oldenbourg | year = 1950}}</ref> ஆங்கிலச் சுருக்கமான ''மக்கெடோன்'' என்பது பிரான்சிய பெயரிலிருந்து திரிந்து வந்திருக்கலாம்.<ref>''Oxford English Dictionary'', s.v. 'Macedon'</ref>
==வரலாறு==
===துவக்க காலமும் மரபுக்கதைகளும் ===
[[வெர்ஜினா|ஏகெ]]யைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை முதல் மக்கெடோனியத் தலைநகராகக் கொண்டு பல மக்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது இது ''எமாத்தியா'' என (மன்னன் எமாத்தியன் பெயரைக் கொண்டு) அழைக்கப்பட்டது. தலைநகர் ஐகெயும் அப்போது ''எடெசா'' என அழைக்கப்பட்டது. பரவலாக அறியப்படும் மைதாசின் இளமைக்காலத்தில் இதுவே தலைநகரமாக இருந்தது. ஏறத்தாழ கி.மு 650இல் ''ஆர்கெட் பரம்பரை'' தங்கள் அரண்மனை-தலைநகரை இங்கு அமைத்துக் கொண்டனர்.இவர்கள் ஆர்கோசு என்ற நகரத்திலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்.<ref name="ring">{{cite book|last=Ring|first=Trudy|title=International Dictionary of Historic Places: Southern Europe|url=http://books.google.com/books?id=74JI2UlcU8AC&pg=PA753&dq=Vergina+Illyrian&hl=en&ei=oB9PTKfaGMmisQbTvdG_AQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCcQ6AEwAA#v=onepage&q=Vergina%20Illyrian&f=false|year=1996|publisher=Taylor & Francis|isbn=1-884964-02-8|page=753}}</ref>
 
கி.மு 8ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் இந்த ஆர்கெட் பரம்பரையினர் உருவாக்கிய இராச்சியமே முதல் மக்கெடோனிய நாடாக கருதப்படுகிறது.
 
மற்ற உருவாக்க மரபுக்கதையாக கரானுசு தனது மக்களுடன் இங்கு இடம்பெயர்ந்து ஓர் இராச்சியத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. <ref>Justin, 7.1.</ref> இவரே எடெசாவை ஐகெ எனப் பெயரிட்டதாகவும் மன்னன் மைதாசையும் பிற மன்னர்களையும் வெளியேற்றி தனது இராச்சியத்தை நிலைநிறுத்தியதாக கூறப்படுகிறது. [[எரோடோட்டசு]] கூற்றின்படி [[டிராயின் ஹெலன்|ஹெலனின்]] மகன் டோரசு தம் மக்களுடன் இங்கு வந்து குடியேறினார். இவர்களிலிருந்து ஒரு பிரிவினர் பின்னர் மேலும் தெற்கே குடியேறி ''டோரியன்கள்'' என அழைக்கப்பட்டனர்.<ref>Herodotus, Histories, 1.56.3.</ref>
 
எலியாக்மொன் ஆற்றுக்கும் ஆக்சியசு ஆற்றுக்கும் இடைப்பட்ட வளமிக்க வண்டல்மண் சமவெளியில் இந்த இராச்சியம் அமைந்திருந்தது. மெக்கெடோனின் முதலாம் அலெக்சாண்டர் காலத்தில் ஒலிம்பசு மலையின் உயரமான பகுதிகளுக்கு இராச்சியம் விரிவுபடுத்தப்பட்டது. இது ''மேல் மக்கெடோனியா'' என அழைக்கப்பட்டது. மற்ற திசைகளிலும் இராச்சியம் விரிவடையத் தொடங்கியது.<ref>[http://books.google.com/books?id=vx251bK988gC&pg=RA6-PA750&dq=ancient+macedon&lr=&hl=bg#PRA6-PA719-IA4,M1 The Cambridge ancient history: The fourth century B.C. edited by D.M. Lewis et al. I E S Edwards, Cambridge University Press, D. M. Lewis, John Boardman, Cyril John Gadd, Nicholas Geoffrey Lemprière Hammond, 2000, ISBN 0-521-23348-8, pp. 723-724.]</ref>
மக்கெடோனியாவின் வடக்கே கிரேக்கரல்லாத மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுடன் மக்கெடோனியர்கள் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். தெற்கே இருந்த தெசாலி மக்களுடன் பண்பாடு மற்றும் அரசியலால் ஒன்றுபட்டிருந்தனர். மேற்கிலிருந்த எபிரசுடன் உடன்பாடு கண்டு அமைதியாக வாழ்ந்தனர். கிமு நான்காம் நூற்றாண்டில் இல்லியன் படையெடுப்புக்களுக்கு எதிராக இணைந்து செயல்பட உடன்படிக்கை செய்து கொண்டனர்.<ref name="Companion">{{cite book |last1=Anson |first1=Edward |editor1-first=Joseph |editor1-last=Roisman |editor2-first=Ian |editor2-last=Worthington |title=A Companion to Ancient Macedonia |url=http://books.google.com/books?id=lkYFVJ3U-BIC&printsec=frontcover&dq=a+companion+to+macedonia&hl=en&ei=M5w6Tc6sEpH6sAPlq_zMAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCcQ6AEwAA#v=onepage&q=Illyrians&f=false |year=2010 |month=December |publisher=Wiley-Blackwell |isbn=978-1-4051-7936-2 |page=5 }}</ref>
 
சிறிதுகாலம் [[அகாமனிசியப் பேரரசு|பெர்சிய]] ஆட்சியில் இருந்த மக்கெடோனியா மக்கெடோனின் முதலாம் அலெக்சாண்டர் கீழ் விடுதலை பெற்றது. பெலோப்போனாசியப் போரில் ஏதென்சுக்கும் இசுபார்த்தாக்கும் தனது ஆதரவை மாறி மாறி வழங்கி வந்தது.<ref name="oyc.yale.edu">[[Donald Kagan|Kagan, Donald]] [http://oyc.yale.edu/classics/introduction-to-ancient-greek-history/content/transcripts/transcript-24-twilight-of-the-polis-cont.-and] " Twilight of the Polis." ''Introduction to Ancient Greek History.''</ref>
 
[[File:Map Peloponnesian War 431 BC-en.svg|thumb|250px|ஏறத்தாழ கி.மு 431இல் பெலோப்போனாசியப் போரின்போது மக்கெடோன்]]
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மக்கெடோனியா_(பண்டைய_இராச்சியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது