புனைவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
| caption3 = [[பிலிப்பு ஓட்டோ ருஙே]], ''காலைப் பொழுது'' ''(The Morning)'', 1808
}}
'''புனைவியம்''' (Romanticism) என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் [[ஐரோப்பா]]வில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். பெரும்பாலான பகுதிகளில் இது 1800க்கும், 1850க்கும் இடையில் உச்சநிலையில் இருந்தது. ஓரளவுக்கு இது [[தொழிற் புரட்சி]]க்கான ஒரு எதிர் வினையாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/eb/article-9083836 |title='&#39;Romanticism'&#39;. Retrieved 30 January 2008, from Encyclopædia Britannica Online |publisher=Britannica.com |date= |accessdate=2010-08-24}}</ref> அத்துடன், [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தின்]], உயர்குடி ஆதிக்கத் தன்மையோடு கூடிய சமூக, [[அரசியல்]] நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், [[இயற்கை]]யை [[அறிவியல்|அறிவியலுக்கு]] அமைய வழிப்படுத்துவதை மறுதலிக்கும் ஒன்றாகவும் இது விளங்கியது.<ref name="Casey">{{cite web | last = Casey | first = Christopher | date = October 30, 2008 | title = "Grecian Grandeurs and the Rude Wasting of Old Time": Britain, the Elgin Marbles, and Post-Revolutionary Hellenism | work = Foundations. Volume III, Number 1 | url = http://ww2.jhu.edu/foundations/?p=8| accessdate = 2009-06-25 }}</ref> [[காட்சிக் கலை]]கள், [[இசை]], [[இலக்கியம்]], போன்ற துறைகளில் இது மிகவும் வலுவானதாக இருந்ததுடன், [[வரலாற்றுவரைவியல்]],<ref>David Levin, ''History as Romantic Art: Bancroft, Prescott, and Parkman'' (1967)</ref> [[கல்வி]],<ref>Gerald Lee Gutek, ''A history of the Western educational experience'' (1987) ch. 12 on [[Johann Heinrich Pestalozzi]]</ref> [[இயற்கை அறிவியல்]]<ref>Ashton Nichols, "Roaring Alligators and Burning Tygers: Poetry and Science from William Bartram to Charles Darwin," ''Proceedings of the American Philosophical Society'' 2005 149(3): 304–315</ref> ஆகிய துறைகளிலும் இது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது. அரசியலிலும் இதன் தாக்கம் குறிப்பிடத் தக்கதாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. புனைவியம் உயர்நிலையில் இருந்த காலத்தில் இது [[தாராண்மையியம்|தாராண்மையியத்துடனும்]], [[பருமாற்றவியம்|பருமாற்றவியத்துடனும்]] தொடர்புள்ளதாக இருந்தது. நீண்டகால நோக்கில் [[தேசியவாதம்|தேசியவாதத்தின்]] வளர்ச்சியில் இதன் தாக்கம் கூடிய முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது எனலாம்.
 
[[அழகியல்]] அனுபவத்தின் உண்மையான மூலங்களாக வலுவான உணர்வுகளை இந்த இயக்கம் முன்னிலைப்படுத்தியது. குறிப்பாகக் கட்டுப்படுத்தப்படாத இயற்கையையும், அதன் கவர்ச்சியான பண்புகளையும் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கும் [[அச்சம்]], [[திகில்]], [[பிரமிப்பு]] போன்ற உணர்வுகள்மீது புனைவியம் கூடிய அழுத்தம் கொடுத்தது. இது நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒரு கண்ணியமான இடத்தை வழங்கியதுடன், தன்னிச்சைத் தன்மையை ஒரு விரும்பத்தக்க இயல்பாகவும் ஆக்கியது.
"https://ta.wikipedia.org/wiki/புனைவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது