ரூப்பர்ட் மர்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு; Unlinked: அமெரிக்கா (3) |
" '''ரூபர்ட் முர்டோச்''' ஐந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''ரூபர்ட் முர்டோச்''' ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற [[ஹாலிவுட்]] திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் உரிமையாளரான உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
==ரூபர்ட் முர்டோச் ஊடகத்துறையில் முன்னேறுதல்==
1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஊடகத்துறையில் மன்னனாகிறார்.
பின்னர் [[மார்கரெட் தாட்சர்|மார்கரெட் தாட்சரின்]] முழுமையான ஆதரவோடு [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் வாராந்திரச் செய்தி இதழின் பங்குகளை வாங்குவதன் மூலம் 1969-ல் அந்நாளிதழைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ வாராந்திர இதழின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட நாளிதழாக மாற்றுகிறார்.
[[ஈராக்]] மீதான போரினால் நாகரீக உலகத்து மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் இவரது செய்தித்தாள் பிரச்சாரம் செய்த்து. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.ஆனால் போரின் முடிவில் இரசாயன ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. [[ஈராக் போர்|ஈராக் போரில்]] கொல்லப்பட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம்.
முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் [[சவூதி அரேபியா]] இளவரசர் அல்லாவி-பின்-தலால் என்பது குறிப்பிடத்தக்கது.
==ரூபர்ட் முர்டோச் மீதான குற்றச்சாட்டுகள்==
ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்]] போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. அரச குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் [[இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்|இளவரசர் வில்லியம்ஸின்]] மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள்.
முர்டோச்சின் செய்தித்தாள்கள் பல்வேறு காலங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் கையூட்டு கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.
==முர்டோச் மீதான குற்றச்சாட்டுகளின் பின்விளைவுகள்==
முர்டோச் மீதான குற்றச்சாட்டுகளால் 168 ஆண்டுகளாக வெளியாகி வந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ என்ற வாராந்திர இதழை 10-07-2011 முதல் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கிலாந்து காவல்துறை ரூபர்ட் முர்டோச் மீது குற்றவழக்குகள் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
==இதனையும் காண்க==
* [[நியூசு ஆப் த வேர்ல்ட்]]
* [[நியூசு இண்டர்நேசனல் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்]]
* [[
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்]]
|