நவீனவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நவீனவியம்''' அல்லது '''நவீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''நவீனவியம்''' அல்லது '''நவீனத்துவம்''' என்பது, ஒரு கலை இயக்கத்தையும், பண்பாட்டுப் போக்குகளின் ஒரு தொகுதியையும், அவை தொடர்பான பண்பாட்டு இயக்கங்களையும் குறிக்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேல் நாட்டுச் சமுதாயத்தில் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக நவீன தொழிற் சமுகத்தின் உருவாக்கமும், [[நகரம்|நகரங்களின்]] விரைவான வளர்ச்சியும், தொடர்ந்து வந்த [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] கொடூரங்களும், நவீனவியம் உருவானதற்கான காரணங்களுள் அடங்குவன. நவீனவியம், [[அறிவொளியம்|அறிவொளிய]] சிந்தனைகள் சிலவற்றை மறுதலித்தது. பல நவீனவியத்தினர் சமய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
பொதுவாக, மரபுவழியான [[கலை]], [[கட்டிடக்கலை]], [[இலக்கியம்]], சமய நம்பிக்கை, சமூக ஒழுங்கமைப்பு, அன்றாட வாழ்க்கை முறை என்பன, உருவாகிவரும் தொழில்மயமான உலகத்தின் புதிய பொருளாதார, சமூக, அரசியல் நிலைமைகளில் காலங்கடந்தவை என்று நம்புபவர்களின் செயற்பாடுகளையும், படைப்புக்களையும் நவீனவியம் உள்ளடக்கியிருந்தது.
 
[[பகுப்பு: கலை இயக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நவீனவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது