உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உயிரியல் அமைப்பு: *விரிவாக்கம்*
வரிசை 53:
* [[உயிரணு]] - பல மூலக்கூறுகள் சேர்ந்து தன்னைத்தானே [[இனப்பெருக்கம்]] செய்து வாழக்கூடிய ஒரு சிறிய அலகை உருவாக்கும்போது, அந்த அலகு உயிரணு எனப்படும். உயிரணுவானது தனியாகவோ, அல்லது பல்கல [[உயிரினம்|உயிரினங்களின்]] ஒரு பகுதியாகவோ காணப்பட்டு உயிர்வாழக் கூடிய நிலையில் இருக்கும்.
* [[இழையம்]] - ஒரே அமைப்பைக் கொண்ட பல உயிரணுக்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்காக ஒன்றாக இணைந்து, ஒரு குழுவாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்போது, அது இழையம் எனப்படும். எ.கா. [[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம்.
* [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]] - சில உடலியக்கங்களைப்செயல்களைப் புரிவதற்காக பல வேறுபட்ட இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும்போது, அது உறுப்பு எனப்படும். எ.கா. [[இதயம்]], [[நுரையீரல்]], [[கண்]] போன்ற உறுப்புக்களில் தசையிழையம், [[நரம்பு|நரம்பிழையம்]] போன்ற வேறுபட்ட பல இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும்.
* தொகுதி - ஒரு குறிப்பிட்ட உடலியக்கச் செயற்பாட்டிற்காக பல உறுப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒரு குழுவாக இருக்கும்போது அது உடல் தொகுதி எனப்படும். எ.கா. [[வாய்]], [[உணவுக்குழாய்]] (களம்), [[இரைப்பை]], [[கணையம்]], [[கல்லீரல்]], [[பித்தப்பை]], [[சிறுகுடல்]], [[பெருங்குடல்]], [[மலவாய்]] (குதம்) போன்ற உறுப்புக்கள் இணைந்து உடலின் [[சமிபாடு|சமிபாட்டுச்]] செயல்முறைக்கான [[சமிபாட்டுத்தொகுதி]]யை உருவாக்கும்.
 
== உயிரியல் கற்கைத் துறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது