கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Linuxkathirvelஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 28:
 
==அறிமுகம்==
பத்து வயதில் தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடைகளில் பேசத் தொடங்கினார். 11 வயதில் சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில் ஒரு தீர்மானத்தின் மீது உரையாற்றினார். 1944 சூலை 29 அன்று தந்தை பெரியாரைப் பார்த்தார். 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். 17 வயதிற்குள் கலந்து கொண்ட நிகழ்வுகள் 227. கலந்து கொண்ட மாநாடுகள் 16. பயணம் செய்த தூரம் 23422 கி.மீ. 23 வயதில் முதுகலை வகுப்பினை முடித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 25 வயதில் கடலூர் திராவிடநாடு பிரிவினை மாநாட்டிற்கு வருகை புரிந்தோரின் உடைமைகளைப் பாதுகாக்கும் பணியினைச் செய்தார். 27 வயதில் சட்டக் கல்வியை முடித்ததோடு தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு பெரியாருடன் தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார். திராவிடர் கழக பொதுச்செயலாளராகவும் ஆனார். 29 வயதில் [[விடுதலை (இதழ்)| விடுதலை]] பத்திரிக்கையின் நிருவாக ஆசிரியர் பொறுப்பேற்றார். 38 வயதில் ஆங்கில மாத இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். 43 வயதில் நெருக்கடி நிலையில்([[மிசா]]) கைது செய்யப்பட்டு 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். '''59 வயதில் 69% [[இடஒதுக்கீட்டை]] பாதுகாக்க 331(சி) தனிச் சட்டத்தை உருவாக்கினார்.''' 65 வயதில் (1998) பெரியார் பிஞ்சு குழந்தைகள் இதழைத் தொடங்கி ஆசிரியர் பொறுப்பேற்றார். 81 வயதில் 71 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்.
 
==ஆசிரியர் பணி==
"https://ta.wikipedia.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது