"தாவீது அரசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

519 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
இஸ்ரவேலின் முதல் அரசர் சவுல் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர், அவர் தேவனுடைய ஆலோசனையை பின்பற்றாமல் தேவனை மறந்ததால் ஆண்டவர் அவரை புறக்கணித்தார்: "சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை." (1 சாமுவேல் 15:11) என்று தேவன் கூறினார்.
 
"உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? என்று சாமுவேல் கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாய்ன் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் செய் என்று ஈசாய்ன் வீட்டிற்கு அனுப்புகின்றார். அப்பொழுது ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். "இவர்களை ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார் சாமுவேல். அங்கு ஈசயின் இளைய மகன் அதுவரையில் அழைககப்படவில்லை. தாவிதின் தந்தை ஈசாய்ன் பார்வையில், தாவிது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பார்வையில் தாவிது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் "தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். (1 சாமுவேல் 16:10-13) <ref>[http://www.biblegateway.com/passage/?book_id=9&chapter=16&version=31 BibleGateway.com: Search for a Bible passage in over 35 languages and 50 versions<!-- Bot generated title -->]</ref>
 
===சவுலின் அரசவையில் தாவீது===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1575682" இருந்து மீள்விக்கப்பட்டது