இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இடதுசாரி அரசியல்''' (''left-wing politics'') என்பது, சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது [[சமூக ஏற்றத்தாழ்வு]]க்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது.<ref name=Lukes>Lukes, Steven. '[http://as.nyu.edu/docs/IO/244/cup.pdf Epilogue: The Grand Dichotomy of the Twentieth Century']: concluding chapter to T. Ball and R. Bellamy (eds.), [http://books.google.com/books?id=N1h4_NqTOFoC&printsec=frontcover&dq=The+Cambridge+History+of+Twentieth-Century+Political+Thought&hl=en&src=bmrr&ei=Hm1YTuKCIsjd0QH7iOCkDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCoQ6AEwAA#v=onepage&q&f=false The Cambridge History of Twentieth-Century Political Thought].</ref><ref>{{cite book |last=Thompson |first=Willie |year=1997 |title=The left in history: revolution and reform in twentieth-century politics |publisher=Pluto Press }}</ref> இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்களில் அக்கறை கொண்டுள்ளதுடன், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது.<ref name=Lukes/>
 
 
அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் [[பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், [[முடியாட்சி]]யை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், [[குடியரசு (அரசு)|குடியரசு]] உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது.
 
 
பின்னர் இச்சொல் பல்வேறு இயக்கங்களைக் குறிப்பதற்குப் பயன்பட்டது. சிறப்பாகக் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் [[குடியரசியம்]], [[சோசலிசம்]], [[கம்யூனிசம்]], [[அரசின்மையியம்]] போன்றவை இச்சொல்லால் குறிக்கப்பட்ட இயக்கங்களுள் அடங்குவன. 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, [[மனித உரிமைகள் இயக்கம்]], [[போர் எதிர்ப்பு இயக்கம்|போர் எதிர்ப்பு இயக்கங்கள்]],[[சூழலியல் இயக்கம்|சூழலியல் இயக்கங்கள்]] போன்ற மேலும் பல இயக்கங்கள் "இடதுசாரி" என்னும் சொல்லினால் குறிக்கப்படலாயின. ஐக்கிய அமெரிக்காவின் [[சனநாயகக் கட்சி]], ஐக்கிய இராச்சியத்தின் [[தொழிற் கட்சி]] என்பனவும் இடதுசாரிகள் என அழைக்கப்பட்டன.
 
==வரலாறு==
அரசியலில் கொள்கை அடிப்படையிலான இரு வேறுபட்ட பிரிவுகளை "இடது", "வலது" என்னும் சொற்களால் அழைக்கும் வழக்கம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் குடியரசு ஆதரவாளும், முடியாட்சி ஆதரவாளர்களும் முறையே "இடது", "வலது" என்னும் சொற்களால் குறிக்கப்பட்டனர்.
 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தேசியவாதம், சோசலிசம், சனநாயகம், போன்றவை பிரான்சு இடதுசாரிகளின் அம்சங்களாக இருந்தத்ன. மூன்றாம் நெப்போலியனின் 1851 ஆம் ஆண்டுச் சதிப்புரட்சியைத் தொடர்ந்து இரண்டாம் பேரரசு உருவான பின்னர், அரசியலில் தீவிர குடியரசியம், கற்பனைச் சோசலிசம் என்பவற்றுக்குப் போட்டியாக மாக்சியம் உருவாகியது. கார்ல் மார்க்சு, பிரடெரிக் ஏங்கெல்சு ஆகியோரால் 1848ல் வெKஇயிடப்பட்ட [[கம்யூனிச அறிக்கை]], எல்லா மனித வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என வலியுறுத்தியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது