அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
அலைத்திருத்திச் சுற்றுகளில் மிகவும் எளிய அமைப்புடையது இது. மாறுதிசை மின்னோட்டத்தின் மேற்பாதியை (+ve அரையலை) மட்டும் செலுத்தி கீழ்ப்பாதியைத்(-ve அரையலை) தடுத்துவிடும் அமைப்பே அரையலைத் திருத்தி ஆகும்.
 
====செயல்பாடு====
இவ்வமைப்பில் தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யின் வெளியீட்டுச் சுற்றில் ஒரு இருமுனையம் இணைக்கப்படுகிறது. தாழ்வடுக்கு மின்மாற்றியால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னோட்ட அலையின் முதல் அரைப்பகுதியின்(+ve அரையலை) போது தாழ்வடுக்கு முன்னோக்குமுன்னோக்குச் சார்பில் இருக்கும்; எனவே, மின்னோட்டம் அதன் வழியே கடத்தப்படும். அலையின் இரண்டாவது அரைப்பகுதியின்(-ve அரையலை) போது இருமுனையம் பின்னோக்குச் சார்பில் இருப்பதால் மின்னோட்டத்தை அது தடுத்து விடுகிறது.
 
இந்நிகழ்வின் விளைவாக உள்ளிடப்பட்ட மாறுதிசை மின்னழுத்தம் நேர்த்திசை மின்னழுத்தமாக மாற்றப்படுகிறது.
 
====வெளியீட்டு மின்னழுத்த அளவின் சமன்பாடுகள்====
ஒரு இலட்சிய அரையலைத்திருத்தியின் சுமையில்(சுமையில்லா) வெளியீட்டு நேர்த்திசை மின்னழுத்தத்தின் அளவு :<ref name=Lander93>{{cite book|last=Lander|first=Cyril W.|title=Power electronics|year=1993|publisher=McGraw-Hill|location=London|isbn=9780077077143|edition=3rd ed.|chapter=2. Rectifying Circuits}}</ref>
 
<!-- This is half-wave, not full-wave. Please do not change to square-root 2. You will be completely wrong and will be reverted. -->
வரி 34 ⟶ 36:
'''முழு அலைத்திருத்தி''' என்பது ஒரு மாறுதிசை மின்னழுத்தத்தின் இரு பகுதியையும் திருத்தும் சுற்று ஆகும். சமனச்சுற்று அலைத்திருத்தியும் (bridge rectifier) மைய மடை மின்மாற்றியைக் கொண்ட அலைத்திருத்தியும் (center tapped transformer type rectifier) முழு அலைத்திருத்திகளேயாகும்.
 
====சமனச்சுற்று முழுவலைத்திருத்தியின் செயல்பாடு====
[[File:Gratz.rectifier.en.svg|thumb|left|600px|4 இருமுனையங்களைக் கொண்ட சமனச்சுற்று முழுவலைத்திருத்தி]]
 
ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) அனைத்திற்கும் மேலுள்ள இருமுனையமும் அனைத்திற்கும் கீழுள்ள இருமுனையமும் ஆகிய இரண்டு மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) நடுவிலுள்ள இரண்டு இருமுனையங்கள் மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு மின்கடத்தல் நிலைகளிலும் மின்சுமைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் ஒரே கதிர்வுடனும், இரு நிலைகளிலும் அதன் வழியே செல்லும் மின்னோட்டங்கள் ஒரே திசையிலும் உள்ளமையால், வெளியீடாக நேர்த்திசை மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது.
 
====மைய மடை மின்மாற்றி கொண்ட முழுவலைத்திருத்தியின் செயல்பாடு====
[[File:Fullwave.rectifier.en.svg|thumb|left|600px|2 இருமுனையங்களையும் ஒரு மைய மடை மின்மாற்றியையும் கொண்ட முழுவலைத்திருத்தி]]
 
இங்கும் ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. இங்குள்ள மின்மாற்றி மையத்தில் ஒரு மடை கொண்டுள்ள மின்மாற்றி ஆகும். முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D1) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D1) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D2) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D2) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு மின்கடத்தல் நிலைகளிலும் மின்சுமைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் ஒரே கதிர்வுடனும், இரு நிலைகளிலும் அதன் வழியே செல்லும் மின்னோட்டங்கள் ஒரே திசையிலும் உள்ளமையால், வெளியீடாக நேர்த்திசை மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது.
 
இவ்வழியாக முழுவலைத்திருத்திகளின் மூலம் மாறுதிசை மின்சாரம், நேர்த்திசை மின்சாரமாக மாற்றம் செய்யப்படுகிறது.
 
====வெளியீட்டு மின்னழுத்த அளவின் சமன்பாடுகள்====
ஒரு இலட்சிய ஒற்றைத் தறுவாய் முழுவலைத்திருத்தியின் (சுமையில்லா) வெளியீட்டு நேர்த்திசை மின்னழுத்தத்தின் அளவு :
<center><math>V_\mathrm {dc}=V_\mathrm {av}=\frac{2V_\mathrm {peak}}{\pi}</math></center>
 
 
<center><math>V_\mathrm {rms}=\frac {V_\mathrm {peak}}{\sqrt 2} </math></center> ஆகும்.
 
இங்கு,
: ''V''<sub>dc</sub>, ''V''<sub>av</sub> - சராசரி வெளியீட்டு நேர்த்திசை மின்னழுத்தம்,
: ''V''<sub>peak</sub> - உள்ளீட்டுத் தறுவாய் மின்னழுத்தத்தின் உச்ச அளவு,
: ''V''<sub>rms</sub> - வெளியீட்டு மின்னழுத்தத்தின் சராசரி வர்க்கமூல அளவு.
 
== குறிப்புதவி ==
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது