"ஹேமார்க்கெட் படுகொலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,824 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
}}
 
'''ஹேமார்க்கெட் படுகொலை''' (''Haymarket affair'', ''Haymarket massacre'' அல்லது ''Haymarket riot'') என்பது மே 4, 1886 இல் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[சிகாகோ]] நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில்<ref>{{cite web|url=http://www.cityofchicago.org/Landmarks/S/SiteHaymarket.html |title=Originally at the corner of Des Plaines and Randolph |publisher=Cityofchicago.org |accessdate=March 18, 2012}}</ref> 8 மணி நேர வேலையை கோரிக்கையாகக் கொண்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது‍ தொழிலாளர்கள் மீது‍ காவல்துறை நடத்திய கொடூர நிகழ்வாகும்.<ref>https://en.wikipedia.org/wiki/Haymarket_affair</ref>
 
== 8 மணி நேர வேலை கோரிக்கை ==
விடிந்தது‍ முதல் இரவு வரை வேலை செய்ய வேண்டும் என்று‍ நிர்ப்பந்திக்கப்பட்டனர். தொடக்க காலத்தில் அதிக ஊதியம், குறைந்த வேலை நேரம் மற்றும் சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சனைகளை தொழிலாளர்களின் கோரிக்கைகளாக இருந்தன. 1861-1862 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்நாட்டு‍ப் போர் நிகழ்ந்தது. அப்போது‍ சில தொழிற்சங்கங்கள் கலைந்து‍ போயின. பின்னர் உள்ளூர் தொழிற்சங்கங்கள் பல தோன்றின. 1866 ஆம் ஆண்டில் ஆகஸ்டு‍ 20 இல் பால்டிமோர் நகரில் ஒன்று‍ கூடி‍ '''அமெரிக்க தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டடைப்பை'' நிறுவினார். ஐரோப்பிய நாடுகளுக்கு‍ அடுத்தபடியாக அமெரிக்காவில் தொழிற்சாலைகள் தோன்றின. 1886 மே முதல் நாளிலிருந்து‍ எட்டு‍ மணி நேர வேலை என்பது‍ சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்பது‍ அமெரிக்க தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளாக எழுந்தது. 1885 ஆம் ஆண்டு‍ அமெரிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 1886 மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]], [[பால்டிமோர்|பால்‌டிமோர்]], [[வாஷிங்டன்]], [[டிட்ராயிட்|டெட்ராய்டு‍]] ஆகிய நகரங்களில் மே முதல் நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது.<ref>{{cite magazine |magazine= புதிய உலகு|last= தம்பி|first= நல்ல|title= மே தினத் தோற்றம்|publicationplace= சென்னை|location= சென்னை|volume= 1|issue= 2, மே 2013|accessdate= டிசம்பர் 17, 2013}}</ref>
 
== படுகொலை நிகழ்வு ==
1886 மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்களில் நடைபெற்றது‍ போலவே சிகாகோ நகரிலும் வேலை நிறுத்தம் தொடங்கியது. 40 ஆயிரம் பேர் கலந்து‍ கொண்ட பேரணிகள் நடைபெற்றன. பேரணியில் ஈடுபட்ட பலர் அன்று‍ காவல்துறையினரால் கைது‍ செய்யப்பட்டனர். மே இரண்டாம் நாளிலும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெற்றன.
 
== படுகொலை நிகழ்வு ==
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். <br />
 
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே 4 ஆம் நாள், இரவு 08.30 மணியளவில் [[சிக்காகோ]] வில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். <br />
 
இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. <ref>{{cite magazine |magazine= புதிய உலகு|last= முப்பால்|first= மணி|title= ஹேமார்க்கெட் நினைவுச் சின்னம்|publicationplace= சென்னை|location= சென்னை|volume= 1|issue= 2|accessdate= டிசம்பர் 07, 2013}}</ref>
 
== நினைவுச் சின்னம் ==
தொழிலாளர் தலைவர்கள் 1886 மே 4 ஆம் நாள் உரையாற்றிய அந்த காட்சியை மேரி போர்க்கர் என்ற சிற்பக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு‍ 18.09.2004 ஆம் நாளன்று‍ அமெரிக்காவில் அதே ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது.
 
== தொழிலாளர் கோரிக்கைக்கான மே நாள் ==
அமெரிக்காவில் எற்பட்ட இந்நிகழ்வுக்குப் பின்னர் 1888 இல் அமெரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பு மாநாட்டில் முடிவான 8 மணி நேர வேலை கோரிக்கை, 1889 ஆம் ஆண்டு‍ பாரிசில் நடைபெற்ற [[கம்யூனிஸ்ட் அகிலம்|இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின்]] முதல் மாநாட்டில் 1890 மே முதல் நாள் 8 மணி நேர நேர வேலையை கோரிக்கைக்கான இயக்கம் நடத்துவது‍ என முடிவு செய்தது. இதன் பின்னர் எல்லா நாட்டிலும் உழைக்கும் மக்கள் மே முதல் நாளை 8 மணி நேர வேலை நேரத்தை கோரிக்கையாக வைத்து‍ பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்த வேண்டும் கம்யூனிஸ்ட் அகிலம் வேண்டுகோள் விடுத்தது. அன்றிலிருந்து‍ [[மே நாள்|மே முதல் நாள்]] தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான நாளாக அனுசரிக்கப்பட்டு‍ வருகிறது. <ref>{{cite magazine |magazine= புதிய உலகு|last= தம்பி|first= நல்ல|title= மே தினத் தோற்றம்|publicationplace= சென்னை|location= சென்னை|volume= 1|issue= 2, மே 2013|accessdate= டிசம்பர் 17, 2013}}</ref>
 
== ஆதாரங்கள் ==
1,003

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1576676" இருந்து மீள்விக்கப்பட்டது