இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
"முதலாவது அனைத்துலகம்" என்றும் குறிப்பிடப்படுகின்ற [[அனைத்துலகத் தொழிலாளர் ஒன்றியம்]] (1864 - 76), பல்வேறுபட்ட நாடுகளிலிருந்து வர்க்கங்கள் அற்ற, அரசற்ற சமூகத்தை உருவாக்குவதில் பல்வேறு நோக்குகளைக் கொண்ட பல [[பேராளர்]]களை ஒன்றாகக் கொண்டுவந்தது. மார்க்சினதும், [[மிகையில் பக்குனின்|மிகையில் பக்குனினதும்]] ஆதரவாளர்களிடையே உருவான பிளவைத் தொடர்ந்து, அரசின்மைவாதிகள் [[அனைத்துலகத் தொழிலாளர் கழகம்|அனைத்துலகத் தொழிலாளர் கழகத்தை]] உருவாக்கினர். [[இரண்டாவது அனைத்துலகம்]] (1888 - 1916) [[முதலாம் உலகப் போர்]] குறித்த விடயத்தில் பிளவுபட்டது. போரை எதிர்த்த [[விளாடிமிர் லெனின்]], [[ரோசா லக்சம்பர்க்]] போன்றவர்கள் கூடிய இடதுசாரித் தன்மை கொண்டவர்களாயினர்.
 
==நிலைப்பாடுகள்==
பின்வரும் நிலைப்பாடுகள் பொதுவாக இடதுசாரிகளுடன் தொடர்புபட்டவை.
 
===பொருளாதாரம்===
இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகள் [[கீனீசியப் பொருளாதாரம்]], [[பொதுநல அரசு]] போன்றவற்றில் தொடங்கி [[தொழிற்றுறைச் சனநாயகம்]], [[சமூகச் சந்தை]] என்பவற்றினூடாகப் பொருளாதாரத்தைத் [[தேசியமயமாக்கல்]], மையத் திட்டமிடல் என்பவைவரை பல்வேறுபட்டவையாக இருந்தன. தொழிற் புரட்சியின்போது, இடதுசாரிகள் தொழிற் சங்கங்களை ஆதரித்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒரு சில தவிர்ந்த பெரும்பாலான இடதுசாரி இயக்கங்கள் பொருளாதாரத்தில் விரிவான அரசுத் தலையீட்டை ஆதரித்தன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது