குரு தட்சணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குரு தட்சனை''' என்பது கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:43, 19 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

குரு தட்சனை என்பது குருகுலத்தில் கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்கு பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும் குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்வியை போற்றும் விதமாக சமர்ப்பிக்கப்படும். ஒரு சீடன் குருவிற்கு தட்சனை கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.

குரு தட்சனைக்கு சில சிறந்த எடுத்துக்காட்டுகள்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி கற்று முடித்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சனையை பெற அன்புடன் மறுத்துவிட்டார். பின் கிருஷ்ணர், குருபத்தினியை அனுகி குரு தட்சனையாக யாது வேண்டும் என்று கூற, குருபத்தினி கண்ணீர் மல்க குருதட்சனை வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற குருபத்தினியின் மகனை தேடிச் சென்று கண்டுபிடித்து, குருவிற்கு காணாமல் போன அவரது மகனையே குரு தட்சனையாக சமர்ப்பித்தார்.

அருச்சுனனின் குருவான துரோணாச்சாரியரின் சிலையை உருவாக்கி, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையை பயின்ற வேடுவகுல இளைஞன் ஏகலைவனிடம், துரோணாச்சாரியார் அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சனையாக பெற்றார் என மகாபாரதம் கூறுகிறது.

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்கலையை கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனை தேர்ச் சக்கரத்தில் கட்டி கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சனை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சனையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.

பின்னர் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று அருச்சுனன் துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச் சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சனையை சமர்ப்பித்து விட்டான்.

இதனையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_தட்சணை&oldid=1577713" இலிருந்து மீள்விக்கப்பட்டது