சிங்களவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|group=சிங்களவர்}}

{{Ethnic group|
|group=சிங்களவர்
|image = [[File:Anagarika Dharmapala.jpg|45px]][[File:VenSomaThero.jpg|45px]][[File:Sri Dhammananda.jpg|45px]]
[[File:M.Wickramasinghe.jpg|45px]][[File:Cyril Ponnamperuma analyzing a moon sample.jpg|45px]][[File:Pro V K Samaranayake.jpg|45px]]
[[File:Anuradhapura17.jpg|45px]][[File:Statue of Parakramabahu in Polonnaruwa.jpg|45px]][[File:King Nissanka Malla.jpg|45px]]
[[File:Official Photographic Portrait of Don Stephen Senanayaka (1884-1952).jpg|45px]][[File:Ranil At UNP Office.jpg|45px]]
[[File:Nadeeka Perera.jpg|45px]][[File:Osaka07 D7A Susanthika Jayasinghe medal.jpg|45px]][[File:Kumar Sangakkara.jpg|45px]]|caption = Row 1: [[Anagarika Dharmapala]]{{•}}[[Gangodawila Soma Thero]]{{•}}[[Balangoda Ananda Maitreya Thero]]{{•}}[[K. Sri Dhammananda|K.Sri Dhammananda Thero]]{{•}}[[Bogoda Seelawimala Nayaka Thera|Bogoda Seelawimala Thero]]

Row 2: [[Martin Wickramasinghe|Martin Wickramasingha]]{{•}}[[Gunapala Piyasena Malalasekera|Prof.Gunapala Piyasena Malalasekera]]{{•}}[[Cyril Ponnamperuma]]{{•}}[[Nalin de Silva|Prof.Nalin De Silva]]{{•}}[[V. K. Samaranayake|V. K. Samaranayaka]]

Row 3: [[Dutthagamani of Sri Lanka|King Maha Dutugamunu]]{{•}}[[Parakramabahu I of Polonnaruwa|King Parākramabāhu I the Great]]{{•}}[[Nissanka Malla of Polonnaruwa|King Nissanka Malla]]{{•}}[[Vimaladharmasuriya I of Kandy|King Vimaladharmasuriya I]]{{•}}[[Rajasinghe II of Kandy|King Rajasingha II]]

Row 4: [[Don Stephen Senanayake|D.S.Senanayaka]]{{•}}[[Arisen Ahubudu]]{{•}}[[Dudley Senanayake|Dudley Senanayke]]{{•}}[[John Kotelawala|John Kothalawala]]{{•}}[[Ranil Wickramasinghe]]

Row 5: [[Vijaya Kumaranatunga]]{{•}}[[Nadeeka Perera]]{{•}}[[Susanthika Jayasinghe|Susanthika Jayasingha]]{{•}}[[Kumar Sangakkara]]{{•}}[[Mahela Jayawardene|Mahela Jayawardana]]
|poptime = Sinhalese
estimated - ~ 15,568,750<ref>http://www.ethnologue.com/show_language.asp?code=sin</ref>
|regions = {{flagcountry|Sri Lanka}}{{nbsp|6}} 13,876,245 (18 [[Districts of Sri Lanka|Districts]])<ref>Department of Census and Statistics in Sri Lanka. (2001). Number and percentage of population by district and ethnic group. Available: http://www.statistics.gov.lk/PopHouSat/PDF/Population/p9p8%20Ethnicity.pdf</ref>
|popplace=[[இலங்கை]]
|poptime=14 [[மில்லியன்]]
|langs=[[சிங்களம்]]
|rels=[[பெளத்தம்]], [[கிறிஸ்தவம்]], [[இஸ்லாம்]]
|related='''[[ஆரியர்]], [[திராவிட இனம்|திராவிட மக்கள்]]'''
[[தமிழர்]]

'''சிங்களவர் (Sinhalese)''' (தமிழகத் தமிழில் ''சிங்களர்'' என்று கூறப்படுவது உண்டு) [[இலங்கை]]யின் பழங்குடிகளிலொன்றைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் இத் தீவின் பெரும்பான்மையினராக உள்ளார்கள். இவர்கள், [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச்]] சேர்ந்ததாகக் கருதப்படும் [[சிங்களம்|சிங்கள]] மொழியைப் பேசுகிறார்கள்.

கி.மு 5ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், இந்தியாவின் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] தென் பகுதிகளிலிருந்தும், [[ஒரிசா]]விலிருந்தும் வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது. சிங்களவரின் வரலாற்று நூல்களும், இலக்கியங்களும், தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் பாண்டிநாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த [[திராவிடர்|திராவிட இனத்த]]வருடன் இனக்கலப்புகள் எற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் சிலவும் இதை உறுதிப் படுத்துகின்றன.<ref name="mastana">{{cite journal |author=Papiha SS, Mastana SS, Purandare CA, Jayasekara R, Chakraborty R |title=Population genetic study of three VNTR loci (D2S44, D7S22, and D12S11) in five ethnically defined populations of the Indian subcontinent |journal=Human Biology |volume=68 |issue=5 |pages=819–35 |year=1996 |month=October |pmid=8908803}}</ref>
இவர்கள் பொதுவாக, [[காக்கேசிய இனக்குழு]]வைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனினும், அயலிலுள்ள [[திராவிடர்]]களுடைய அடையாளங்களும், இவர்களிடம் காணப்படுகின்றன.

== சிங்களவர் சமயம் ==
''முதன்மைக் கட்டுரை: [[சிங்களவர் சமயம்]]''
{{சிங்களவர் பண்பாடு}}
[[சிங்களவர்|சிங்களவரின்]] [[சமயம்|சமய]] அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் '''சிங்களவர் சமயம்''' குறிக்கின்றது எனலாம். அனைத்து சிங்களவர்களுக்கும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவது இல்லை என்றாலும், அனேக சிங்களவர்கள் தேரவாத [[பெளத்தம்|பெளத்த]] சமயத்தை முதன்மையாகப் பின்பற்றுகின்றார்கள். பெளத்தம் சிங்களவரின் பொதுப் பண்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. கந்தன் ([[முருகன்]]), பத்தினி ([[கண்ணகி]]) போன்ற "தெய்வங்களின்" வழிபாடும் சிங்களவர் சமய நம்பிக்கைகளுடன் கலந்துள்ளது. சிறுபான்மையான சிங்களவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். இஸ்லாமிய சிங்களவர்களும் உள்ளார்கள்.
[[பௌத்தம்]] [[இலங்கை]]யில் அறிமுகப்படுத்தப்பட முன், இவர்கள் இந்துசமயத்தையும், பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகளையும் கைக்கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. பௌத்தம் நன்றாக இலங்கையில் வேரூன்றிய பின், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்படும்வரை, சிங்களவர் பெரும்பாலும் பௌத்தர்களாகவே இருந்தார்கள் என்று கூறலாம். கி.பி 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் ஆட்சியின் போது, அவர்கள் ஆட்சியின் கீழிருந்த கரையோர மக்கள் பலர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார்கள். அதன்பின், ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிகளின்போது பலர் அவர்களுடைய மதப்பிரிவான புரொட்டஸ்தாந்து (prostestant) சமயத்துக்கு மாறினார்கள்.

== சிங்கள நாகரிகம் ==
ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழ்ந்த, சிறிய இனமாக இருந்த பொழுதிலும், பழங் காலத்தில் இவர்கள் கட்டியெழுப்பிய நாகரிகம் வியக்கத்தக்கதாகும். உலர் வலயங்களான இலங்கையின் வடமத்திய பகுதிகளில், கிறித்து சகாப்தத்தின் ஆரம்பத்தை அண்டிய காலப்பகுதிகளிலேயே, அவர்களல் கட்டப்பட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்கள், அக்காலத்தில் அவர்களுடைய தொழில்நுட்ப வல்லமைக்குச் சான்றாகும். மேலும் [[அனுராதபுரம்]], [[பொலனறுவை]] போன்ற இடங்களிலுள்ள இடிபாடுகளினால் அறியப்படும், அக்கால நகர அமைப்புகளும், பௌத்தவிகாரங்களும், அக்காலக் கட்டிடக்கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

== சிங்களவர் தமிழர் உறவு ==
சிங்களவர்களும் தமிழர்களும் அருகருகே வசித்து வருவதாலும், வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல முனைத் தொடர்புகளாலும், பரிமாறுதல்களாலும் விளைவுகளாலும் இறுகப் பின்னப்பட்டதாலும் இரு இனங்களுக்குமிடையான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுறவு தொன்மையானது, நெருடலானது, பலக்கியது, சிக்கலானது. இந்த உறவை நட்புநிலையில், ஆரோக்கியமாக பேணப்படாமல் விட்டதனாலேயே [[இலங்கை இனப்பிரச்சினை]] உருவானதெனலாம்.

== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தமிழர்]]
* [[சிங்களம்]]

==குறிப்புக்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
* [http://lucy.ukc.ac.uk/EthnoAtlas/Hmar/Cult_dir/Culture.7869 சிங்களவர் சமூகம்] - {{ஆ}}
{{இலங்கையின் இனக்குழுக்கள்}}

[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:இலங்கையில் சமயம்]]
[[பகுப்பு:இலங்கையில் பௌத்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது