நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் எனப்படும் உயிர்க்கோள காப்பகம் (என்.பி.ஆர்) உலகில் உயிர்க்கோளங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உயிர்க்கோளம் (பயோஸ்பியர்) என அழைக்கப்படும் பூமியைத் தவிர இந்த பிரபஞ்சத்தில், வேறு எந்தப்பகுதியிலும் உயிரினங்கள் இருப்பது தொடர்பாக இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
[[File : Nilgiris_biosphere_reserve.jpg | thumb | left|200px |யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்த நீலகிரி மலை]]
==முதல் உயிர்க்கோள் காப்பகம்==
நாம் வாழும் பூமியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வகைகளில் நுண்ணுயிர்கள் முதல் பிரமாண்ட யானை வரையிலான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 செப்டம்பர் 1ம் தேதி யுனெஸ்கோ அங்கீகாரம் நீலகிரி மலைக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகம் நீலகிரி.
 
==உயிர்க்கோள் மண்டலம்==
தமிழகம், கேரளம், கர்நாடகம் என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உயிர்க்கோள மண்டலம். இதில், சுமார் 5,560 ச.கி.மீ., பரப்பளவை உள்ளடக்கியுள்ள இந்த மண்டலத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ, பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதகளில் 1527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 14,55 ச.கி.மீ., பரப்பளவையும் உள்ளடக்கியதுதான் இந்த நீலகிரி உயிர்க்கோள் மண்டலம்.
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_உயிர்க்கோளக்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது