'''தென்சிலுவை''' (ஆங்கிலம்:crux (constellation)) என்பது நவீன 88 [[விண்மீன்]] குழாம்களில் மிகச் சிறியது ஆகும். இதனுடையஇதனது [[இலத்தீன்]] பெயர் [[சிலுவை|சிலுவையைக்]] குறிக்கிறது. இது [[வானம்|வானத்தின்]] [[தெற்கு|தென்திசையில்]] அடிவானத்தை நோக்கி சற்றுச் சாய்ந்த நிலையில் காணப்படும். இதற்கு மிக அருகில் உள்ள [[உடு]] [[பீட்டா செண்டோரி]] ஆகும். இதைத் [[தென் அரைக்கோளம்|தென் அரைக்கோளத்தில்]] இருந்து தெளிவாகக் காணலாம். இந்த [[விண்மீன் குழாம்|விண்மீன் குழாமில்]], சிலுவையில் நீளமான பகுதி தென் பகுதியைக் காட்டுவதால் தென்சிலுவை எனப்படுகிறது.<ref>[http://noolaham.net/project/31/3062/3062.pdf தென் சிலுவை, பக்கம் 22]</ref>