களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அமைவிடம்: [பதிப்புரிமை மீறல் தரம் 9 சமய நூல்]
வரிசை 7:
 
== வரலாறு ==
தொன்மைவாய்ந்த இக்கிராமத்தில் [[வெற்றிலை]]ச் சடங்கு செய்வதற்காக [[வேடர்|வேடுவ]] குலத் தலைவன் 'களுவன்' களுதாவளையின் வடமேற்கு மூலையில் ஆறும் சுனையும் அழகிய வயலும் சூழ்ந்த மணல் மேட்டில் பற்றைக் காடுகளை வெட்டி அகற்றினான். 'களுவன்' வணங்கிய இடத்தை 'களுதேவாலயம்' என்று அழைத்தார்கள். [[கதிர்காமம்|கதிர்காம]] யாத்திரிகர் இருவர் இவ்விடத்தில் தங்கி ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்பதைக் கண்டு சுனையில் நீராடி திரிலிங்க பூசை செய்தனர். அப்போது நிலமட்டத்தில் சுயம்புலிங்கம் ஒன்றைக் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல எத்தனித்த போது சிவலிங்கம் சலம் வரையில் நீண்டு சென்றது. செய்தியறிந்த ஊரவர்கள் ஒன்று கூடி கொத்துப் பந்தலிட்டு வழிபடத் தொடங்கினர். சுயம்புலிங்கம் அடியார்களுக்கு அற்புதங் காட்டியது.
 
ஊரவர்களை ஒன்று திரட்டி இலங்கையிலே சிவாலயங்கள் பல இருக்கின்றபடியால், சுயம்புலிங்கத்தை மூலசத்தி விநாயகராக வழிபடும்படி கூறினார் என்பதை "இலங்கை தன்னில் ஈசன் ஆலயங்கள் உண்டுபாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் இத்தேசம் இல்லாததாலே பிள்ளையார் கோவிலது அதுவாக சிவபிரானைப் பணியும் என்று இயம்புனார் வன்னமையும் இயம்பினாரே" என்ற களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை_பிள்ளையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது