களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆலய அமைப்பு: [பதிப்புரிமை மீறல் தரம் 9 சமய நூல்]
வரிசை 18:
 
'எல்லை நாள் இவர் வந்த காலம் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது.
 
==ஆலய அமைப்பு==
களுதாவளைச் '''சுயம்புலிங்கப் பிள்ளையார்''' ஆலயம் மடாலயக் கோயிலாகும். கருவறையில் இருந்த சுயம்புலிங்கத்தை மறைத்து, பீடம் அமைத்து அதன்மேல் பிள்ளையார் திருவுருவம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயம் உள்சுற்றையும், பரிவார தெய்வங்களுக்கான [[முருகன்]], நாகதம்பிரான், [[வைரவர்]] ஆலயங்களையும், பலிபீடம், மகா மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, வாகனசாலை, மணித்தூண் எனும் அம்சங்களையும் கொண்டு அமைந்துள்ளது.
 
ஆலயத்தில் முன்பிருந்த பலிபீட நந்தியை மாற்றி, அவ்விடத்தில் மூசிகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது கருவறையை அடுத்துள்ள மண்டபத்தில் உள்ளது.
 
ஆலயத்தின் தென்மேற்கே நாகதம்பிரான் ஆலயமும் வடமேற்கே [[முருகன்]] ஆலயமும் அமைந்துள்ளன. ஆலய மண்டப வாயிலின் இருபுறமும் துவார பாலகர் சிற்பங்களும் ஆலயத்தின் திருக்கதவுகளுக்கு மேலுள்ள சுவரில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்களும் [[சிவன்]], [[பார்வதி]], [[விநாயகர்]], [[நாரதர்]], [[முருகன்]] சிற்பங்களும் உள்ளன. இருபக்கச் சுவர்களிலும் சமய குரவர்களான [[திருஞானசம்பந்தர்|சம்பந்தர்]], [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பர்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]], [[மாணிக்கவாசகர்]] எனும் நால்வரது திருவுருவங்களும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
 
ஆலயத்தில் [[சிவன்]], [[பார்வதி]] எழுந்தருளி விக்கிரகங்களும், [[விநாயகர்]] எழுந்தருளி விக்கிரகமும், [[வள்ளி (தெய்வம்)|வள்ளி]], [[தெய்வானை]] சமேதராய் விளங்கும் [[முருகன்]] எழுந்தருளி விக்கிரகங்களும் உள்ளன. ஆலயத்தின் முன்புறத்தே தீர்த்தக் குளமும், சுவாமி இளைப்பாறும் மண்டபமும் ஆலயத்தின் தென் கிழக்கே யாத்திரிகர் மடமும், கல்யாண மண்டபமும் உள்ளன.
 
==தலச் சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை_பிள்ளையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது