அயனிப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:NaF.gif|300px|thumb|right|[[சோடியம்|சோடியமும்]] [[புளோரின்|புளோரினும்]] அயனிகளால் பிணைந்து [[சோடியம் புளோரைடு]] உருவாதல். சோடியம் ஓர் நிலையான இலத்திரன் அமைப்பைப் பெற, தனது மிகவும் வெளிப்புறத்திலுள்ள [[இலத்திரன்|இலத்திரனை]] இழக்க விடுபட்ட இலத்திரன் புளோரின் அணுவுடன் வெப்ப வெளியேற்றத்துடன் இணைகிறது. இவ்வாறு எதிர் எதிர் மின்னூட்டுக்களைப் பெற்ற அயனிகள் ஒன்றையொன்று கவர்கின்றன.]]
'''அயனிப் பிணைப்பு''' (''ionic bond'') அல்லது மின்மவணுப் பிணைப்பு என்பது [[எதிர்மின்னி]] இழப்பாலோ ஏற்பாலோ எதிரெதிர் [[மின்னூட்டு|மின்னூட்டம்]] பெற்ற இரு [[அயனி]]களுக்கிடையே (மின்மவணுக்களுக்கு இடையே) [[நிலைமின்னியல்|நிலைமின்]] கவர்ச்சியால் உருவாகும் [[வேதியியற் பிணைப்பு]] ஆகும். அயனிப் பிணைப்புகள் ஓர் நேர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[உலோகம்]] ([[மாழை]]), எதிர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[அலோகம்]] (மாழையிலி) இடையே உருவாவதாகும். ''தூய'' அல்லது முழுவதுமான அயனிப் பிணைப்பு இருக்க இயலாது: அனைத்து அயனிப் பிணைப்பு சேர்மங்களும் பல்வேறளவுகளில் [[சகப் பிணைப்பு]] (பகிர்வுப் பிணைப்பு) கொண்டுள்ளன. எனவதயனிப்பிணைப்பு என்பது சகப் பிணைப்புத் தன்மையை விட (பகிர்வுப் பிணைப்புத் தன்மையைவிட) அயனிப்பிணைப்புத் தன்மை கூடுதலாக உள்ளவை என்று கூறுவது பொருந்தும். இரு அயனிகளுக்கும் உள்ள மின்னூட்டுக்களின் வேறுபாடு கூடுதல் ஆக ஆக சகப் பிணைப்பை விட அயனிப் பிணைப்புத் தன்மை கூடுகிறது. பகுதி அயனிப் பிணைப்பாகவும் பகுதி சகப் பிணைப்பாகவும் உள்ள பிணைப்புகள் ''முனைவுறு சகப் பிணைப்புகள்'' (முனைவுறு பகிர்வுப் பிணைப்பு) என அழைக்கப்படுகின்றன.
 
==அயனிப் பிணைப்புச் சேர்வைகளின் பண்புகள்==
 
திடநிலையில் மின்கடத்தா அயனிச் சேர்மங்கள் உருகிய நிலையில் அல்லது கரைசல்களில் மின்கடத்தியாக விளங்குகின்றன. இவற்றிற்கு பொதுவாக உயர்ந்த உருகுநிலை இருக்கும். பெரும்பாலும் நீரில் இவை கரையும்.
 
==உருவாக்கம்==
 
நிலையான எதிர்மின் கட்டமைப்பை அடைவதற்காக குறைந்தளவு [[மின்மமாக்கும் ஆற்றல்]] உடைய அணு [[எதிர்மின்னி]]யை வெளியேற்றும் போது அயன் பிணைப்பு உருவாகின்றது. இவ்வாறு நேர் மின்னேற்றம் உடைய கற்றயன் உருவாகும். (ஏனெனில் அணு எதிர்மின்னியை/ எதிர்மின்னிகளை இழந்து விட்டதால் அணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை எதிர்மின்னிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.) இவ்வாறு வெளியேற்றப்படும் எதிர்மின்னியை [[எதிர்மின்னி நாட்டம்]] அதிகமுள்ள (அனேகமாக ஒரு [[அல்லுலோகம்]]) அணுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மறை மின்னேற்றமுடைய அனயன்கள் (ஏனெனில் அணு எதிர்மின்னியை/ எதிர்மின்னிகளை ஏற்றுக்கொண்டதால் அணுவில் உள்ள எதிர்மின்னிகளின் எண்ணிக்கை நேர்மின்னிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்) உருவாக்கப்படும். இவ்வாறு எதிர்மின்னிகளை இழப்பதாலும், பெற்றுக்கொள்வதாலும் ஒரு நிலையான எதிர்மின்னிக் கட்டமைப்பை அயன் பிணைப்பில் பங்குகொள்ளும் அணுக்கள் பெற்றுக்கொள்கின்றன.
 
உதாரணமாக மேலே அசைவூட்டல் படத்தில் காட்டப்பட்ட அயன் பிணைப்புத் தாக்கத்தை நோக்குவோம். 2,8,1 என்ற எதிர்மின்னி கட்டமைப்புடைய [[சோடியம்]] ஒரு எதிர்மின்னியை இழந்து [[அருமன் வாயு]]வான நியோனுக்குரிய எதிர்மின்னி கட்டமைப்பை அடைகின்றது. 2,7 என்ற எதிர்மின்னி கட்டமைப்புடைய புளோரீன் சோடியத்திலிருந்து கிடைக்கப்பெறும் எதிர்மின்னியை ஏற்றுக்கொண்டு 2,8 என்ற நியோனுக்குரிய எதிர்மின்னி கட்டமைப்பை அடைகின்றது. சோடியம் அயனும் புளோரீன் அயனும் எதிரெதிர் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதால் இவை இரண்டும் மின்னேற்ற விசையால் ஈர்க்கப்பட்டு சோடியம் புளோரைட்டு என்ற அயன் சேர்வை உருவாகின்றது.
 
: Na + Fl → Na<sup>+</sup> + Fl<sup>−</sup> → NaFl
 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அயனிப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது