சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
சர்க்கரைப் பதிலீடுகளுள் ஒரு வகை ''உயர்செறிவு இனிப்பூட்டிகள்'' எனப்படுகின்றன. இவை பொதுவாக ''மேசைச் சர்க்கரை'' எனப்படும் [[சுக்கிரோசு|சுக்கிரோசிலும்]] பலமடங்கு [[இனிப்பு]]த்தன்மை கொண்டவை. இதனால், உணவில் பயன்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு இனிப்பூட்டியே தேவைப்படுவதால், இவற்றின் ஆற்றல் பங்களிப்பும் பெரும்பாலும் புறக்கணிக்கத் தக்கதே.
 
சில வேளைகளில் இவ்வாறான சேர்வைகளிலிருந்து கிடைக்கும் சுவை உணர்வு, சுக்கிரோசில் இருந்து கிடைப்பதிலும் வேறுபட்டுக் காணப்படும். இதனால், கூடிய அளவு இயற்கையான சுவையைப் பெறுவதற்காக இவற்றைச் சிக்கலான கலவைகளாகவே பயன்படுத்துகின்றனர்.
 
[[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆறுவகையான சர்க்கரைப் பதிலீடுகள் பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை, [[இசுட்டெவியா]], [[அசுப்பார்ட்டேம்]], [[சுக்கிரலோசு]], [[நியோட்டேம்]], [[ஏசுசல்பேம் பொட்டாசியம்]], [[சக்கரின்]] என்பவை. இவ்வாறான செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதனால், உடல்நலத்துக்குத் தீங்கு உண்டா என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:உணவுச் சேர்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது