சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
* '''சர்க்கரை நோய்''': சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் [[குருதிச் சர்க்கரை]] அளவைக் கட்டுப்படுத்த வேண்டி உள்ளது. சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை உள்ளெடுப்பைக் குறைத்துக் குருதிச் சர்க்கரை அளவு கூடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. சில சர்க்கரைப் பதிலீடுகள் ஆற்றலை வெளிவிட்டாலும், மிகவும் மெதுவாகவே இது நடைபெறுகிறது. இதனால் குருதிச் சர்க்கரை திடீரென உயராமல் கட்டுப்படுத்தலாம்.
* '''எதிர்வினைக் குருதிச் சர்க்கரைக் குறை''': எதிர்வினைக் குருதிச் சர்க்கரைக் குறை உள்ளவர்களில் குளுக்கோசு விரைவாகக் குருதிக்குள் உறிஞ்சப்பட்டும்போது கூடிய அளவு இன்சுலின் சுரக்கப்படுகிறது. இதனால், குருதிச் சர்க்கரை அளவு உடல், மூளை ஆகியவற்றின் சரியான செயற்பாட்டுக்குத் தேவையான அளவிலும் குறைந்துவிடுகிறது. இதனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மெதுவாக உள்ளிழுக்கப்படக்கூடிய உணவு வகைகளை உண்பதுடன், சர்க்கரைப் பதிலீடுகளையும் பயன்படுத்துகின்றனர்.
* '''செலவுக் குறைப்பு''': பல சர்க்கரைப் பதிலீடுகள் சர்க்கரையை விடச் செலவு குறைவானவை. நீண்டகாலம் வைத்திருக்கக்கூடியதாக இருப்பதும், செறிவான இனிப்புத் தன்மையுமே இவ்வாறு விலை குறைவாக இருப்பதற்கான காரணங்கள். இதனால், குறுகிய காலத்தில் பழுதடையாமல் இருக்கவேண்டிய உணவுப் பொருள்களில் சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும், சர்க்கரைப் பதிலீடுகளினால் ஏற்படுவதாகக் கருத்தப்படும் [[பக்கவிளைவு]]கள், நீண்டகால நோக்கில் மேற்குறிப்பிட்ட பயன்களை மீறியவையாக இருக்கின்றன.
* செலவுக் குறைப்பு
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது