ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
===நூலகங்கள்===
 
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலேயே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மிகப்பெரிய பல்கலைக்கழக நூலக அமைப்புக் காணப்படுகின்றது. இங்கே 11 மில்லியன் நூல்கள் காணப்படுகின்றன. இவை அலுமாரிகளில் 120 மைல் (190 கிலோமீற்றர்) நீளத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இப் நூலகங்களில் ஒன்றான பொட்லியன் நூலகமே பிரிட்டிஷ் நூலகத்திற்கு அடுத்தபடியாக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக உள்ளது. இந்த நுலகம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] வெளியிடப்படும் அனைத்து நூல்களினதும் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு சட்டரீதியான சேமிப்பு நூலகம் ஆகும். இந்த நூலகத்தின் நூல்கள் வைக்கும் அலுமாரியின் நீளம் ஒவ்வொரு வருடமும் மூன்று மைல்கள் (ஐந்து கிலோமீற்றர்கள்) வீதம் அதிகரித்துச் செல்கின்றது.
 
===அருங்காட்சியகங்கள்===
 
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய பல திறந்த அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் பராமரிக்கின்றது. இவற்றுள் ஒன்றான அஷ்மோலியன் அருங்காட்சியகம் 1683 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகமே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பழமையான அருங்காட்சியகமும் உலகின் மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழக அருங்காட்சியகமும் ஆகும். அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் [[மைக்கலாஞ்சலோ]], [[லியொனார்டோ டா வின்சி]], [[பாப்லோ பிக்காசோ]] போன்றோரின் படைப்புக்கள் உள்ளடங்கலாகக் கலை மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பல குறிப்பிடத்தக்க திரட்டுகள் காணப்படுகின்றன.
 
===பூங்காக்கள்===
 
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பூங்காக்கள் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து காணப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளன. இப் பூங்காக்கள் பல்வேறு விளையாட்டுக் களங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகப் பூங்காக்கள் மரபியல் பூங்கா, பரிசோதனைத் தோட்டம் என்பவற்றையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன.
 
ஆக்சுபோர்டு உயர் தெருவில் அமைந்துள்ள தாவரவியற் பூங்காவே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மிகப் பழமையான தாவரவியற் பூங்கா ஆகும். அத்தோடு இது உலகின் மூன்றாவது பழமையான அறிவியல் தோட்டம் ஆகும். இத் தாவரவியற் பூங்கா 8000 வகையான தாவர வகைகளை 1.8 ஹெக்டயர் (4 ½ ஏக்கர்) நிலப்பரப்பில் கொண்டுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆக்சுபோர்டு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது