நிலை மாற்றப் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" மிக அதிகமான உருகுதல் உள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 7:
== வகைகள் ==
நிலை மாற்ற பொருட்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை கனிம மற்றும் கரிம நிலை மாற்றப் பொருட்களாகும். ஹைட்ரேட் உப்புகள் கனிம நிலை மாற்றப் பொருட்களுக்கு உதாரணம் ஆகும். பாரப்பின் மெழுகு கரிம நிலை மாற்றப் பொருட்களுக்கு உதாரணம் ஆகும்.
 
== நிலை மாற்றப் பொருட்களின் பண்புகள் ==
=== வெப்ப இயற்பியல் பண்புகள் ===
* குறிப்பிட்ட கன அளவில் அதிக அளவிலான வெப்ப ஆற்றலைச் சேகரிக்கும் தன்மை
* கூடுதல் வெப்பத்தைச் சேகரிக்கத் தக்க அளவிலான தன வெப்ப ஏற்புத் திறன்
* புறப்பரப்புக்கும் கன அளவிற்கும் இடையிலான தகவு அதிகம்
* நிலை மாற்றத்தின் போது ஏற்படும் கன அளவு மாற்றம் புறக்கணிக்கத்தக்கது.
* ஒவ்வொரு முறை நிலை மாற்றத்தின் போதும் மாறாத வெப்பம் சேகரிக்கும் தன்மை
=== வேதிப் பண்புகள் ===
* வேதியியல் மற்றும் வெப்ப நிலைப்பு தன்மை
* மீள் தன்மை உடைய உருகுதல் மற்றும் உறைதல் நிகழ்வுகள்
* அரிப்பு உருவாகுவது இல்லை
* அதிகப்படியான பயன்பாடுக்குப் பின்னரும் நிலை மாற்றப் பொருட்களின் தரம் குறைவது இல்லை
 
== நிலை மாற்றப் பொருட்களை உறையிடல் ==
 
நிலை மாற்றப் பொருளின் மூலக்கூறுகள் அதன் திரவ நிலையில் பிரிவடைந்து விடுவதால், சரியாக மறுமுறை திண்மம் ஆவது இல்லை. எனவே இவை முழுமையாக உறைவதில்லை. இந்நிகழ்வு வெப்பம் சேகரிக்கும் தன்மையைக் குறைக்கிறது. இதைத் தடுக்க, நிலை மாற்றப் பொருட்கள் உறையிடப் படுகின்றன. இவ்வகை உறையிடல் முறைகள், நிலை மாற்றப் பொருட்களைச் சேகரிக்கும் கொள்கலனாகச் செயல்படுகின்றன. மேலும் இதனால், உருகுதல் மற்றும் உறைதல் நிகழ்வுகளை முறைப்படுத்துகிறது. நிலை மாற்றப் பொருட்களை மூடியிருக்கும் உறை, திரவம் உருகி வெளியேறாமல் இருக்கவும் பயன்படுகிறது. அதிகப் படியான பயன்பாடுகளில் நிலை மாற்றப் பொருட்கள் உறையிடப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. ஒரு சில பயன்பாடுகள் குறிப்பாக மின்னணு சாதனங்களைக் வெப்பத்தை வெளியேற்றும் சாதனங்களில் இவை உறையிடாமல் பயன்படுத்தப் படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நிலை_மாற்றப்_பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது