நாரண. துரைக்கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்நாட்டின் பத்திரிகையாளர் எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:58, 23 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

நாரண. துரைக்கண்ணன் (பி. ஆகஸ்ட் 24, 1906 - ??) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஜீவா என்ற புனை பெயரில் எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னை மயிலாப்பூரில் இவர் நாராயணசாமி, மீனாம்பாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது.

பத்திரிகையாளராக அறிமுகம்

பரலி சு. நெல்லையப்பர் மூலம் லோகோபகாரி வார இதழில் உதவி ஆசிரியராக அறிமுகமானர். தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். 1932 ஆம் ஆண்டு பிரசண்ட விகடன் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 1934 ஆனந்த போதினி என்ற இதழின் ஆசிரியரானார்.

நாவலாசிரியராக அறிமுகம்

பிரசண்ட விகடன் மூலம் ஜீவா என்ற புனைபெயரில் பல கதைகளை எழுதினார். இவர் எழுதிய உயிரோவியம், நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?, தாசி ரமணி முதலியவை பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் ஆகும். தீண்டாதார் யார்? என்னும் சமுதாயப் புரட்சி நாடகத்த்ஹை எழூதினார். காதலனா? காதகனா? என்பது மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவல். இவற்றை விட இலட்சிய புருடன் என்னும் அரசியல் வேலைக்காரி, நடுத்தெரு நாராயணன் போன்ற சமூக சீர்திருத்தக் கதைகளையும் எழுதினார்.

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேல் நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக பாரதி விடுதலைக் கழகம் என்ற அமைப்பில் இவர் தலைவராக இருந்தார்.

தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், சென்னை கம்பர் கழகச் செயலாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரண._துரைக்கண்ணன்&oldid=158353" இலிருந்து மீள்விக்கப்பட்டது