வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 93 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[File:3D model hydrogen bonds in water.svg|right|thumb|இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும்]]
 
'''சேர்மங்கள்''' (''Chemical Compound'') அல்லது '''கூட்டுப்பொருள்''' என்பன ஒன்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களின்]] இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். [[அணு]]க்களின் இடையே உருவாகும் [[வேதிப்பிணைப்பு|பிணைப்பின்]] தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களெ சேர்மமாக கருதப்படுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H<sub>2</sub>) ஒரு சேர்மம் அல்ல.
 
==முக்கிய எண்ணக்கருக்கள்==
 
*சேர்மங்களில் தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் காணப்படும். உதாரணமாக நீரில் ஒரு ஒக்ஸிஜன் அணுவுக்கு இரண்டு ஐதரசன் அணுக்கள் என்ற விகிதத்தில் இருக்கும்.
 
*ஒவ்வொரு சேர்மத்துக்கும் தனித்துவமான பண்புகள் காணப்படும். சேர்மத்தை ஆக்கும் தனிமங்களின் பண்புகள் வெளிப்பிட மாட்டா. உதாரணமாக எரியக்கூடியதும் எரிவதற்குத் துணைபோகாததுமான ஐதரசனும், எரியாததும் எரிவதற்குத் துணைபோகும் ஒக்ஸிஜனும் இணைந்து நீர் எனும் சேர்மம் உருவாகின்றது. எனினும் நீர் எரியாது, எரிவதற்குத் துணை போகாது. நீர் எனும் சேர்மம் தனக்கே உரிய தனித்துவமான இயல்பைக் காட்டுகின்றதே தவிர அதனை ஆக்கிய தனிமங்களின் இயல்பைக் காட்டவில்லை. ஆக்ஸிஜன் வாயு, ஐதரசனும் வாயு எனினும் நீர் திரவமாகும். இது முற்றிலும் தனித்துவமான இயல்பாகும். அதாவது '''சேர்மங்கள் எப்போது தனித்துவமான இயல்புகளைக் காட்டுவனவாகும்'''.
 
==சேர்மங்களையும் கலவைகளையும் வேறுபடுத்தல்==
 
*சேர்மங்களில்(compound) தனிமங்கள் இரசாயன ரீதியில் இணைக்கப்பட்டிருக்கும். பௌதிக ரீதியில் கலக்கப்பட்டிருக்கும் பொருட்சேர்வையை கலவை (mixture) என்ற சொல் குறிப்பிடும்.
 
*சேர்மங்களை ஆக்கும் தனிமங்களை பௌதிக ரீதியில் பிரிக்க முடியாது; இரசாயன முறையாலேயே பிரிக்கலாம். கலவைகளை மிக இலகுவாக பௌதிக முறையில் பிரித்தெடுக்கலாம். இரும்பையும் சல்பரையும் வெப்பமேற்றுவதன் மூலம் பெறப்பெடும் இரும்பு சல்பைட்டு சேர்மத்தை ஆக்கும் இரும்பையும் சல்பரையும் காந்தத்தின் மூலமோ பிற பௌதிக முறையாலோ பிரித்தெடுக்க முடியாது. எனினும் வெப்பமேற்றாமல் கலக்கப்பட்ட இரும்புத்தூள் மற்றும் சல்ஃபர் தூள்களை சாதாரண காந்தத்தின் உதவியுடன் பிரித்தெடுக்கலாம்.
 
[[படிமம்:Ferrous sulfide.jpg|thumb|right|]]
 
[[படிமம்:iron-sulphur mixture.jpg|thumb|left|]]
 
 
*சேர்மங்களின் இயல்பு அதனை ஆக்கும் தனிமங்களின் இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் கலவைகளின் இயல்பு அவற்றை ஆக்கும் கூறுகளில் தங்கியுள்ளன.
 
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது