டோக்கியோ பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
உரை திருத்தம்
வரிசை 82:
* மேம்பட்ட அறிவியல், தொழில்நுட்பத்திற்கான கழகம்
 
இது பல தரவரிசைப் பட்டியல்களில் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் உயர் படிப்புகளுக்கான தரவரிசையிலும், உலக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையிலும் ஆசியாவின் முதன்மை பல்கலைக்கழகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவிலும் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் உள்ளது. உலக ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பிலும், கிழக்காசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.
 
==வளாகங்கள்==
===ஹாங்கோ வளாகம்===
ககா மாகாணத்தில் பண்ணைக்காரர்களாக இருந்தவர்கள் மேத குடும்பத்தினர். அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் தற்போதைய வளாகம் அமைந்துள்ளது. இங்கு அதிகம் வளரும் மரம் கிங்கோ மரம் ஆகும். இதன் நினைவாக, பல்கலைக்கழகத்தின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் நிகழும் மே திருவிழா இங்கு கொண்டாடப்படும். இங்கு தோட்டத்துடன் கூடிய குளம் உள்ளது. இதனை சன்சிரோ குளம் என அழைக்கின்றனர்.
 
==கொமாபா வளாகம்==
இங்கு கலை & அறிவியல் கல்லூரி, முதுநிலைப் பட்டதாரிகளுக்கான கலை & அறிவியல் கல்லூரி, கணிதவியல் கழகம் ஆகியன உள்ளன. துறைகளுக்கான ஆய்வகங்களும் உள்ளன. இங்கு 7000 மாணவர்கள் பொதுக் கல்வி கற்கின்றனர். மேலும், சிறப்பு பாடங்களை 450 பேரும், முதுநிலைப் படிப்பை 1,400 பேரும் கற்கின்றனர். இது டோக்கியோவின் மெகுரோ மாவட்டத்தில் உள்ளது. இங்கு 600 அமரக்கூடிய பெரிய கலையரங்கம் உள்ளது. இங்குள்ள நூலகத்தில் 5,60,000 நூல்கள் உள்ளன.
மாணவர்களுக்கான உடற்பயிற்சியகம் உள்ளது. இங்குள்ள உடல்நல மையத்தில் உடல்நல சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொமாபா அருங்காட்சியத்தில் அரிய ஜப்பானிய படங்கள், மேற்கத்திய முறையில் வரையப்பட்டவை, சீன, கொரிய, ஜப்பானிய தொல்பொருட்கள் உள்ளிட்டவை காணக்கிடைக்கின்றன. இங்கு மாணவர்கள் குழுக்களும் உண்டு. முந்நூற்றுக்கும் அதிகமான மாணவர் குழுக்கள் உள்ளன. இவை வெவ்வேறு நோக்கத்தைக் கொண்டவை. ஆண்டுக்கொருமுறை, மூன்று நாட்கள் கொண்டாடப்படும் கொமாபா திருவிழா குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று. இது மே மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பர்.
 
==படத்தொகுப்பு==
வரிசை 111:
** [[யொய்சிரோ நம்பு]], இயற்பியல், 2008
** [[எய்சி நெகிசி]], வேதியியல், 2010
 
இவர்கள் தவிர, பலர் கட்டிடக்கலை நிபுணர்களாகவும், கணிதவியலாளர்களும், உயர்ந்த நிர்வாகப் பொறுப்புகளும் வகிக்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==மேலும் பார்க்கவும்==
*[ ]
 
[[பகுப்பு:ஜப்பானிய பல்கலைக்கழகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டோக்கியோ_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது