கல்வயல் வே. குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{stub}} → {{writer-stub}}
No edit summary
வரிசை 4:
 
 
{{writer-stub}}கல்வயல் வே. குமாரசாமி
தொடர்ச்சியாகப் படிப்பதும், படைப்பதும் வழக்கமாகக் கொண்டவர் தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்டவர்.
 
மனித வாழ்வின் சகல பரிமாணங்களையும் மதிப்பிட்டு விமர்சிப்பவர். அதனால் மரபின் விரிவுகளையும் நலிவுகளையும் தகுந்தவாறு உணர்ந்த தெளிவு இவருக்குண்டு.
 
இந்தத் தெளிவும் உள்ளுணர்வும் அவரை ஒரு தேர்ச்சி பெற்ற கவிஞனாக நம்மிடையே நிறுவியுள்ளன. இவருடைய படைப்புகளில் ‘சிரமம் குறைகிறது, ‘மரண நனவுகள்’ ‘பாப்பாப்பா’ ‘பாடு பாப்பா’ ‘பாலர் பா’ என்பன நூலுருப் பெற்றவை.
 
பல கவிதைகளை கவிரயங்குக்கெனவும் படைத்துள்ளார்.
 
பெரியவர்களுக்கு மட்டுமன்றிப் பாலர்களுக்கும் உவப்பான பாடல் பாடியுள்ளார்.
 
சிறுவர்களுக்கான உளவியல் பொருத்தப்பாடுடைய எண்ணக் கருக்களையும், சொல்லடைவுகளையும் கொண்ட ஆக்கங்கள் பாப்பாப்பா, பாடுபாப்பா, பாலர் பா ஆகிய புத்தகங்களில் உள்ளன.
 
இவர் ஒரு மெல்லிசைப் பாடலாசிரியரும் கூட. இவரது பாடல்களை இசை மேடைகளிலும், வானொலியிலும் முன்னர் அடிக்கடி கேட்கக்கூடியதாயிருந்தது.
 
இப்போது எமது மெல்லிசைப் பாடலுக்கான களம் எமது வானொலியிலும், மேடைகளிலும் மிகவும் அரிதாகவே இருக்கின்றது.
 
கவிதையாக்கத்தில் மட்டுமன்றி, கலை, இலக்கியம், மொழி தொடர்பான சர்ச்சைகளிலும், கருத்தாடல்களிலும் குமாரசுவாமி ஈடுபடுவதுண்டு. தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் அவர் இது தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் அவர் எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கல்வயல்_வே._குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது