அனைத்துலக நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சான்றுகள்+
வரிசை 18:
'''அனைத்துலக நீதிமன்றம்''' (International Court of Justice) என்பது, [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா சபை]]யின் [[நீதித்துறை]] சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது [[நெதர்லாந்து]] நாட்டின் தலைநகரான [[ஹேக்]]கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, [[ஹேக் அனைத்துலகச் சட்ட அக்காடமி]] என்னும் நிறுவனத்துடன் [[அமைதி மாளிகை]] (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல [[நீதிபதி]]கள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
 
ஐக்கிய நாடுகள் அவையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த [[நிரந்தர அனைத்துலக நீதிமன்றம்]] (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. [[அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம்]] என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும், அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல. <ref>[http://www.icj-cij.org/documents/index.php?p1=4&p2=2&p3=0 Statute of the International Court of Justice]. Retrieved 31 August 2007.</ref>
 
இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், [[ஐக்கிய நாடுகள் பொதுச்சபை]] ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த [[வழக்கு]]களையே கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந்நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், [[வளர்ந்துவரும் நாடுகள்]] மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் [[தடுப்பு வாக்கு]]ரிமைக்கு உட்பட்டது ஆகும்.
வரிசை 29:
நீதிபதிகளின் தீர்ப்புகள் ஒரே மாதிரியோ, வேறுபட்டோ இருக்கலாம். வேறுபட்டு இருந்தால், அதிகம் பேரின் கருத்துக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். சம அளவில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால், தலைவரின் முடிவே இறுதியானது.
 
ஐநா சபையின் சட்டத்தின் 93வது பட்டயத்தின்படி, அதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.. <ref>The jurisdiction is discussed in the entire Chapter XIV of the [[UN Charter]] (Articles 92–96). [http://www.un.org/aboutun/charter/ Full text]</ref> ஐநா சபையில் இல்லாத நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். சுவிட்சர்லாந்தும், நவுருவும் ஐநா சபையில் இல்லாத போதே இதன் உறுப்பினராகச் சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
==பாதுகாப்புக் குழுவும் அனைத்துலக நீதிமன்றமும்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது