எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சான்றுகள் சேர்ப்பு
வரிசை 5:
'''ஊடு கதிர் அலைகள்''' (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். [[இரும்பு]] போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் [[அலைநீளம்]] 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும் .
 
இதனைக் கண்டுபிடித்த [[வில்ஹெம் ராண்ட்ஜன்]] என்பவரின் பெயரால் ''ராண்ட்ஜன் கதிரிவீச்சி'' என்றும் சில [[மொழி]]களில் அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|title=X-Rays|url=http://missionscience.nasa.gov/ems/11_xrays.html|publisher=[[NASA]]|accessdate=November 7, 2012}}</ref> காந்த,மின் புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது.
 
மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், [[வானூர்தி]] தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது.
வரிசை 14:
இக்கதிர்கள் கேட்மியம் சல்பைடு (CdS), சிங்கேட்மியம் சல்பைடு (ZnCdS), போன்ற சில பொருட்களில் விழும்போது உடனொளிர்தலைத் (Fluorescence) தோற்றுவிக்கின்றன. இப்பண்பே எக்சு கதிர்களைக் கண்டுகொள்ள உதவியது. மேலும் உடனொளிர் திரையிலும்( fluorescent Sreen) வலுவூட்டும் திரையிலும் ( Intensifying Sreen) பயன்படக் காரணமாகும். படிக இயல் ஆய்விலும் தொழில் துறையிலும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. எக்சு கதிர்கள், சாதாரண ஒளி அலைகளைப்போல் அதே திசைவேகத்துடன் பயணிக்கின்றன. ஓளிஅலைகளின் பண்புகள் யாவும் இதற்கும் பொருந்தும்.
 
எக்சு-கதிர்கள் என அழைக்கப்படும் இராண்ஜன் கதிர்கள் (Roentgen rays) 1895 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த [[வில்ஹெம் ராண்ட்ஜன்|வில்லெம் இராண்ஜன்]], குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்சு-கதிர்கள் என அழைத்தார்.<ref name="squires">Novelline, Robert (1997). ''Squire's Fundamentals of Radiology''. Harvard University Press. 5th edition. ISBN 0-674-83339-2.</ref>
 
எக்சு-கதிர்கள் மற்றும் [[காம்மா கதிர்|காம்மா கதிர்களுக்கு]] இடையே ஒரு வரையறை வேறுபடுத்தி உலகளவில் ஒருமித்த கருத்து இல்லை. அவற்றின் மூலத்தை வைத்துக்கொண்டே இக் கதிர்வீச்சுக்களை இருவகையாக வேறுபடுத்துகின்றனர். எக்சு கதிர்கள் [[இலத்திரன்|இலத்திரன்களில்]] இருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன, ஆனால் [[காம்மா கதிர்|காம்மா கதிர்கள்]] அணுக்கருவிலிருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. மற்றச் செயல்முறைகளின் மூலம் இந்த உயர் ஆற்றலை உருவாக்க முடிவதாலும் சில வேளைகளில் அது உருவாக்கப்படும் முறை தெரியாமல் போவதாலும் இந்த வரையறையில் சிக்கல்கள் உள்ளன. ஒரு பொதுவான மாற்றீடாக [[அலைநீளம்|அலைநீளத்தின்]] அடிப்படையில் எக்சு-கதிர் மற்றும் [[காம்மா கதிர்|காம்மாக் கதிர்வீச்சுக்கள்]] வேறுபடுத்தப்படுகின்றன. 10<sup>−11</sup> m அலைநீளத்தைக் கொண்ட கதிர்வீச்சு [[காம்மா கதிர்|காம்மாக் கதிர்கள்]] எனப்படுகின்றது.
வரிசை 21:
 
{| align=center class="wikitable"
|+ சில பொதுவான நேர்மின்முனைப் பொருட்கள் வெளிவிடும் எக்சு-கதிர்களின் சிறப்பியல்புகள்<ref>{{cite web|url=http://www.nist.gov/pml/data/xraytrans/index.cfm |title=X-ray Transition Energies |publisher=NIST Physical Measurement Laboratory |date= 2011-12-09 |accessdate=2013-03-10}}</ref><ref>{{cite web|url=http://xdb.lbl.gov/Section1/Sec_1-2.html |title=X-Ray Data Booklet Section 1.2 X-ray emission energies |publisher=Center for X-ray Optics and Advanced Light Source, Lawrence Berkeley National Laboratory |date= 2009-10-01|accessdate=2013-03-12}}</ref>
! rowspan = 2 | நேர்மின்முனைப்<br>பொருட்கள் !! rowspan = 2 | அணு<br>எண் !! colspan=2 | ஒளியணுச் சக்தி [keV] !! colspan=2 | அலைநீளம்[nm]
|-
வரிசை 45:
|}
 
எக்சு-கதிர்கள் இலத்திரன்களில் இருந்து உமிழப்பட்டாலும், அவை வெப்ப எதிர்மின்வாயினால் வெளியிடப்படும் [[இலத்திரன்|இலத்திரன்களை]] அதிக மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி வேகத்தினைக் கூட்டும் [[வெற்றிடக் குழாய்|வெற்றிடக் குழாயகிய]] [[எக்சு-கதிர்க் குழாய்|எக்சு-கதிர்க் குழாயிலிருந்தும்]] தயாரிக்கப்படலாம். அதிவேகத்தில் செல்லும் இலத்திரன்கள் உலோக இலக்காகிய எதிர்மின்வாயுடன் மோதி எக்சு-கதிர்களை உருவாக்குகின்றன.<ref>{{cite book
|last = Whaites
|first = Eric
|coauthors = Roderick Cawson
|title = Essentials of Dental Radiography and Radiology
|publisher = Elsevier Health Sciences
|year = 2002
|pages = 15–20
|url = http://books.google.com/?id=x6ThiifBPcsC&dq=radiography+kilovolt+x-ray+machine
|isbn = 0-443-07027-X}}</ref>
 
==மின்சாரமின்றி எக்சு-கதிர்கள்==
வரி 72 ⟶ 81:
 
[[வில்ஹெம் ரொண்ட்ஜென்|வில்லெம் இராண்ஜன்]] கண்டுபிடித்ததிலிருந்து எக்சு-கதிர்கள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. எக்சு-கதிர்கள் [[மருத்துவப் படிமவியல்|மருத்துவப் படிமவியலில்]] பயன்படுத்தப்படுகின்றன. எக்சு-கதிரின் முதலாவது மருத்துவப் பயன்பாடானது அவரது கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தது. 2010 இல் உலகளாவிய ரீதியில் 5 பில்லியன் மருத்துவப் படிமவியல் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
==வெளி இணைப்புக்கள்==
{{commons}}
{{Wiktionary}}
*[http://www.crtsite.com/page5.html Historical X-ray tubes ]
*[http://www.rtstudents.com/x-rays/broken-humerus-xray.htm Example Radiograph: Fractured Humerus]
*[http://www.iuk.edu/~koalhe/img/Equipment/xray.jpg A Photograph of an X-ray Machine]
*[http://www.x-raysafety.com/ X-ray Safety]
*[http://www.ionactive.co.uk/multi-media_video.html?m=4 An X-ray tube demonstration (Animation)]
*[https://web.archive.org/web/20070710033139/http://deutsche.nature.com/physics/7.pdf 1896 Article: "On a New Kind of Rays"]
*[http://docs.google.com/fileview?id=0B89CZuXbiY7mNmQxYmVlNDktNjBiZS00NjcwLTg0ODgtZjc3NWUwOWUxZDg5&hl=tr "Digital X-Ray Technologies Project"]
*[http://rad.usuhs.mil/rad/home/whatis.html What is Radiology?] a simple tutorial
*[http://rad.usuhs.edu/medpix 50,000 X-ray, MRI, and CT pictures] MedPix medical image database
*[http://www.datasync.com/~rsf1/bremindx.htm Index of Early Bremsstrahlung Articles]
*[http://www.life.com/image/first/in-gallery/44881/extraordinary-x-rays Extraordinary X-Rays] – slideshow by ''[[Life (magazine)|Life]]''
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது