பட்டாம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Amamsa (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Amamsa (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
** [[Riodinidae]]
}}
 
'''வண்ணத்துப் பூச்சி''' அல்லது '''வண்ணாத்திப் பூச்சி''' என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் [[பூச்சி]]. பற்பல வண்ணங்களைக் கொண்ட இறக்கைகளை கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி என அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து [[தேன்|தேனை]] உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. இப்பூச்சி முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான வண்ணத்துப்பூச்சியாய் உருமாற்றம் பெறுவதும் மிகவும் வியப்பூட்டுவதாகும். வண்ணத்துப்பூச்சிகள் [[உயிரினம்|உயிரின]] வகைப்பாடுகளில் '''லெப்பிடோப்டரா''' (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த [[அறிவியல் பெயர்|அறிவியல் பெயரில்]] உள்ள'' லெப்பிசு'' (Lepis) என்பது [[செதில்]] என்று பொருள்படும், ''ப்டெரான்'' (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள் படும். எனவே வண்ணத்துப்பூச்சிகள் ''செதிலிறகிகள்'' என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் [[இரவு|இரவில்]] இரை தேடும் [[விட்டில் பூச்சி]]களும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.
 
"https://ta.wikipedia.org/wiki/பட்டாம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது