"தம்பிலுவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,233 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
<references/>{{coord|7|08|N|81|51|E|display=title|region:LK_type:city_source:GNS-tawiki}}
 
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். இங்கு இந்துக்களே அதிகமாக வாழ்கிறார்கள் , பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது. இங்கே [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் ஆலயம் ஆகும்வகிக்கின்றது.
 
இதன் எல்லைகளாக வடக்கே [[அக்கரைப்பற்று]], தெற்கே [[திருக்கோவில்]] மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது.
==வரலாறு==
[[படிமம்:Thambiluvil.jpg|left|250px|thumb|தம்பிலுவில் நுழைவாயில்]]
இன்றைய [[திருக்கோவில்]] உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், [[]மட்டக்களப்பு|மட்டக்களப்பின்] முதலாவது தேசத்துக் கோவிலான [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்]] திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.
மட்டக்களப்பின் [[வெருகல்]] ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில் [[மதுரை]]யிலிருந்து செண்பகநாச்சியம்மன், பத்திரகாளியம்மன், கண்ணகியம்மன் சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் [[கண்ணகி]] சிலையை மட்டக்களப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவிலைச் சேர்ந்த ஊராக்க என்ற இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஷ்டைசெய்து வழிபடப்பட்டது. பெளத்த சிங்கள அரசர்களினதும், தமிழ் அரசர்கள், சிற்றரசர்களினதும் ஆதரவில் கி.பி 2ம் நூற்றாண்டு தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரை கண்ணகி வழிபாடு செழித்து வளர்ந்தது.
 
[[உகந்தை]]யைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்"<ref>ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு)</ref> என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.
 
 
கணபதி ஐயர் எனும் இக்கிராமத்து அர்ச்சகர் ஒருவர் தாய்மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்தாரென்றும், [[கண்டி இராச்சியம்|கண்டியை]] அவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்றும் அவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர். ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம்.
 
திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் அர்ச்சகர்களாக பணிபுரிய வீரசைவககுருமார்கள் அக்காலத்தில் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தம் பட்டர் என வாழ்த்தி குடியேற்றி அவ்வூருக்கு தம்பட்டை என நாமம் சூட்டப்பட்டது. மேலும் இவர்களது வழிபாட்டுக்காக மல்லிகார்ச்சுன புரத்திலிருந்து கணேஷ விக்கிரகம் ஒன்று பெறப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மேலும் மேகவண்ணன் தனது தாயார் தம்பதிநள்ளாள் பெயரில் வாவியொன்றையும் வெட்டுவித்து அவ்வாவிக்கு தம்பதிவில் எனப்பெயர் இட்டான். வில் என்ற சொல் வில்லைப் போன்ற குளத்தைக் குறிக்கும்.
 
மழைபொழிய வேண்டி கொம்பு விளையாடல் என்ற வழிபாட்டின் மூலம் கண்ணகியம்மனை வழிபடுவார்கள். தம்பிலுவில கண்ணகியம்மன் கோயிலில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுகிறது. பொதுவாக கண்ணகி கோயிற்கதவுகள் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு பதத்தி என்ற முறைப்படி 10 நாட்கள் வரை பூஜஜகள் செய்யப்பட்டு பின் கதவுகள் மூடப்படும். மக்கள்பெருதளவில் கூடி பயபக்தியுடன் வணங்குவர். கள்ளங்குடா, ஆரையம்பதி, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணை ஆகிய இடங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் வேறுபாடுகளுண்டு.
 
==தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்==
{{main|தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்}}
கி.மு 5ம் நூற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதித்திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நூற்றாண் டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக மட்டகிளப்பு மானமீயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது. இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமிய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
 
==கோயில்கள் ==
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1590784" இருந்து மீள்விக்கப்பட்டது