"தம்பிலுவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தம்பிலுவில்''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். [[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]] இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது.
 
இதன் எல்லைகளாக வடக்கே [[அக்கரைப்பற்று]], தெற்கே [[திருக்கோவில்]] மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது.
 
==வரலாறு==
இன்றைய [[திருக்கோவில்]] உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] முதலாவது தேசத்துக் கோவிலான [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்]] திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.
 
[[உகந்தை]]யைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" <ref>ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு)</ref> என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.
 
 
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1590799" இருந்து மீள்விக்கப்பட்டது