ஓணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
 
[[கொல்லவர்ஷம்]] என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான [[சிங்கம்]] மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.
ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் [[அத்தம்]] , இரண்டாம் நாள் [[சித்திரா]], மூன்றாம் நாள் [[சுவாதி]] என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை [[ஓண சாத்யா]] என அழைப்பர். ஐந்தாம் நாள் [[அனுஷம்]] (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான [[படகுப்போட்டி]] நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் [[வஞ்சிப்பாட்டு]] என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்[[கேட்டை]](திரிக்கேட்டா) , ஏழாம் நாள் [[மூலம்]]. எட்டாம் நாள் [[பூராடம்]]. ஒன்பதாம் நாள் [[உத்திராடம்]] என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் [[திருவோணம்]] என்ற கொண்டாட்டத்துடன் [[ஓணத்திருவிழாஓணத் திருவிழா]] முடிவடைகிறது.
 
== மன்னனுக்கான கொண்டாட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது