உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
உப்பு உற்பத்தியானது உலகின் மிகப்பழமையான இரசாயன உற்பத்திகளில் ஒன்றாகும்.<ref>{{cite web | url=http://www.salt.org.il/arch.html | title=Salt made the world go round | work=Salt.org.il | date=1 September 1997 | accessdate=7 July 2011}}</ref> உப்பு உற்பத்தியின் முக்கிய வளமாக, அண்ணளவாக 3.5% உப்புத்தன்மையுடைய கடல்நீர் காணப்படுகிறது. உலகின் சமுத்திரங்கள் உப்பு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. சமுத்திரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உப்பு உற்பத்தி வளங்கள் இன்றுவரை அளக்கப்படவில்லை.<ref name=IHS/> கடல் நீரை ஆவியாக்குதல் மூலம் உப்பைப் பெறுதல் அதிகமாக உப்பைப் பெற்றுக் கொள்ளப் பயன்படும் முறையாகும். உப்புநீரை ஆவியாக்கும் உப்பளங்களில் நீர் ஆவியாவதற்காக சமுத்திரத்திலிருந்து பெறப்பட்ட உப்பு நீர் இடப்படும். இது ஆவியாகி உப்புப் படிகங்களைத் தோற்றுவிக்கும்.
 
==உண்ணத்தக்க உப்பு==
உப்பு மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தங்களது சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்ய அவசியமானது ஆகும். உப்பு உலகளாவிய ரீதியில் சுவையூட்டியாக பயன்படுகிறது. இது சமையலில் பயன்படுகிறது. இது உணவு வேலளையின் போது உணவு மேசையில் காணப்படும். அவரவர் தேவையான அளவில் பெற்றுக்கொள்ள இது சிறந்த வழி ஆகும். உப்பு ஐந்து வகைச் சுவைகளில் ஒன்றாகும்.
 
மேசை உப்பு 97 இல் இருந்து 99 சதவீதமான சோடியம் குளோரைட் ஐ கொண்டுள்ளது.
==உணவுகளில் உப்பு==
உப்பு அதிகமான உணவுவகைகளில் காணப்படுகிறது. ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் இறைச்சி, மரக்கறிகள் மற்றும் பழங்களில் உப்பு மிகவும் சிறிய அளவிலேயே காணப்படுகிறது. இது உணவுகளில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது. மேலும் இது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது