"மாவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,828 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் "ஜவ்வரிசி" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
 
==சோளம் மாவு==
 
'''சோளம்''' (இலங்கையில் 'இறுங்கு') என்பது புல்வகையைச் சேர்ந்த பல [[இனம் (உயிரியல்)|இனங்களை]] உள்ளடக்கிய தாவரப் [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] (genus) ஆகும். இவற்றுட் சில [[தானியம்|தானியங்களுக்காகவும்]] வேறு சில [[கால்நடை]]த் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், [[ஆஸ்திரலேசியா]] பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை.
[[இந்தியா|இந்திய]] மாநிலமான தமிழகத்தில் [[பொங்கல்]] திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் இது [[திருச்சி]]மாவட்டம், [[பெரம்பலூர்]] மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.
 
இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
;சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்
 
*ஆற்றல்-349 கி.கலோரி
*புரதம்-10.4 கிராம்
*கொழுப்பு-1.9 கி
*மாவுச்சத்து - 72.6 கி
*கால்சியம் - 25 மி.லி
*இரும்புசத்து 4.1 மி.கி,
*பி-கரோட்டின் – 47 மி.கி
*தயமின் - 0.37 மி.கி
*ரிபோப்ளோவின் 0.13 மி.லி
*நயசின் - 3.1 மி.கி.
[[படிமம்:Mill,pulverisation,Tamil nadu478.jpg|thumbnail|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்]]
[[File:Mill,pulverisation,Tamil nadu479.jpg|thumbnail|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1595313" இருந்து மீள்விக்கப்பட்டது