சோழர் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
அவன் காலத்துக்கு முன் கோயில்கள் மரத்தால் கட்டப்பட்டன என்றும், மரங்களை இணைக்க உலோக ஆணிகள் அல்லது வார்ப்பட்டைகள் உபயோகிக்கப்பட்டன என்றும் செங்கல்-சுண்ணாம்பு ஆகியவற்றைப் பரப்பி அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன என்று உறுதியாகத் தெரிகிறது. அவற்றில் மரமும் உலோகமும் கூட பயன்பட்டிருக்கலாம். இத்தகைய பழைய கட்டடங்கள் ஒன்றுகூட இப்போது எஞ்சவில்லை; அவையாவும் அழிந்துவிட்டன: அவற்றின் அமைப்புகள், சாயல்கள், இலச்சினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பல்லவர்களின் கட்டடங்கள், தூண்கள், நகரங்கள், அலங்கார வரைபடங்கள் முதலியயாவும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
 
அரண்மனைகள், கோயில்கள், நகரங்களில் மாளிகைகள், கடைத் தெருக்கள் ஆகியவற்றைப் பற்றி இலக்கியங்களில்தான் வருணனைகள் காணப்படுகின்றன. அவை சற்று அதிகப்படியாயும் கற்பனையோடும் புனைப்பட்டிருக்கின்றன. எந்த அளவு அவை உண்மை என்பதைச் சரிபார்ப்பதற்கு இப்போது ஆதாரம் எதுவும் இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களின் பேராதரவில் கல் கட்டட நிர்மாணக் கலையும் கல் சிற்ப வேலைப்பாடும் மிக உயர்ந்த நிலைய அடைந்தன. கல்லெல்லாம் கலை வண்ணம் காட்டும் [[மாமல்லபுரத்தில்|மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] எழிலுடன் திகழும் கடற்கரைக் கோயில் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர், வைகுந்தப் பெருமாள் கோயில்கள் ஆகிய மூன்றையும் பல்லவர் கலைத் திறனுக்குச் சிகரங்கள் என்று சொல்லலாம்.
 
பிறகு, பல்லவர் செல்வாக்குக் குறைந்து அவர்களுடைய இறுதி நாட்களில், பொருளாதாரக் கட்டுப்பாடு ஏற்பட்டு சின்னஞ்சிறு கட்டடங்கள் உருவாயின. தென்னிந்திய வெண்கலப் படிமம் ஒன்றுகூட, 'உறுதியாக இது பல்லவர் காலத்தியதே' என்று அறுதியிட்டுச் சொல்லத் தக்கவையாக இல்லை. ஆனால், சோழர் ஆட்சியின் தொடக்கத்திலேயே உலோக வார்ப்புக்கலை உயர்ந்த நிலை அடைந்திருந்தது என்பதால், இந்தக் கலையின் வளர்ச்சி பல்லவர் காலத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
வரிசை 11:
== சோழர் கலை ==
 
[[பல்லவர்களும்|பல்லவர்கள்|பல்லவர்களும்]] [[பாண்டியர்களும்|பாண்டியர்கள்|பாண்டியர்களும்]] போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்குப் பின் வந்த [[சோழர்களும்|சோழர்கள்|சோழர்களும்]] தொடர்ந்து ஆதரித்து மேன்மேலும் அது வளர்ச்சியடையச் செய்தார்கள். பல்லவ பாண்டிய வம்சங்களின் கீழ் கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத்தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
 
அங்கே நகர அமைப்புக் கலையின் இடைவிடாத தொடர்ச்சியும், முக்கியமான இடங்களில் அன்று முதல் இன்று வரை தெருக்களின் பெயர்கள் நின்று நிலவுவதையும் காணலாம். மலையிலிருந்து அப்படியே கோயில்களையும் மண்டபங்களையும் குடைந்து எடுக்கிற அரிய கலை, பிற்காலப் பல்லவ ஆட்சியில் கைவிடப் பட்டது. கல்கோயில்களைக் கட்டுவது பெரிது வழக்கமாகப் பரவியது. இந்தப் பழக்கத்தைத் தமிழ் நாடெங்கும் பரப்பினார்கள் என்பது சோழர்களுக்குரிய தனிப்பெருமை. ஆரம்பகால சோழர்கள் கட்டிய கட்டடங்களுக்கும், பல்லவ பேரரசு சரிந்து கொண்டிருந்த சமயங்களில், பிற்காலப் பல்லவர்கள் கட்டிய கோயில்களுக்கும் அவ்வளவாக வேற்றுமை கண்டுகொள்ள முடியாது.
 
பிற்கால நிலை இதனின்றும் முற்றுலும் வேறுபட்டது. சோழ ஆட்சியின் பரப்பும் செல்வமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரியவும் பெருகவும் ஆயின. இதற்குத்தக்க அவர்கள் கட்டிய கோயில்களும் நிலப்பரப்பிலும் உயரத்திலும் கலைத்துறையிலும் தனிச்சிறப்புக்களுடன் அமைந்தன. [[தஞ்சாவூரிலும்|தஞ்சாவூர்|தஞ்சாவூரிலும்]] [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரத்திலும்|கங்கைகொண்ட சோழபுரம்]] சோழர்கள் கட்டிய கோயில்கள் மிகப் பிரம்மாண்டமானவை; தலை சிறந்தவை; வெளிநாட்டார் கூட வியப்படையும் வண்ணம், தமிழ்நாட்டின் கலைத் திறமையை நிலைநாட்டும் நிறுவனங்கள்; அவற்றின் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத்தையும் அவர்கள் உலகத்திற்கு அறிவித்தார்கள்.
 
சோழர்களுடைய கட்டடத் திறமைக்கும் கலை ஆர்வத்திற்கும் முடிசூட்டியது போல கும்பகோனத்திற்கு அருகே தாராசுரத்திலும் திருபுவனத்திலும் இரு பெரிய கோயில்கள் உள்ளன. சிற்பம், ஓவியம் வெண்கலக் படிகக்கலை ஆகிய துறைகளும், கோயில் கட்டடக் கலையோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறின.
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது