பியூனிக் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ரோம் மற்றும் கார்த்தீசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ரோம் மற்றும் கார்த்தீசியதிற்கு இடையே கி.மு. 264 முதல் கி.மு 146 வரை நடந்த மூன்று தொடர் போர்கள் பியூனிக் போர்கள் என்பதாகும். அக்காலத்தில் நடைப்பெற்ற மிகப்பெரிய போர் என கருதப்படுகிறது. கார்த்தீசிய பேரரசு மற்றும் ரோம் நாட்டின் விரிவாக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடே இப்போரின் காரணமாக கூறப்படுகிறது. முதலாம் பியூனிக் போரில், மேற்கு மெடீடேரிய மெடீடேரியப் பகுதியில் தன்னுடைய பலமான கப்பற்படை மூலம் கார்த்தீசிய அரசு மேலாதிக்கம் செலுத்தியது. இத்தாலியில் ஆட்சி வலுப்பெற்றிருந்ததாலும், ரோமன் அரசு கப்பற்படை வலுவில்லாமல் இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேல், இருப்பக்கமும் பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்பில் முடிந்த பியூனிக் போரிற்குப்பின், கார்த்தீசிய பேரரசு, ரோமன் பேரரசால் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் மேற்கு மெடீடேரிய பகுதி முழுதும் ரோமன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
 
==போரின் பிண்ணனி==
கி.மு 3ஆம் நூற்றாண்டில், தூனிசியா கடலோரடத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கியது. மேற்கு மெடீடேரியப் பகுதியில் கார்த்தீசிய அரசின் இணையாக விளங்கிய ஒரே நாடு ரோமன் ஆகும். ரோமன் அரசிடம் மிகவும் ஒழுக்கமான, மிகப் பெரிய படை இருந்த போதிலும், முதலாம் பியூனிக் போரின் பின்னடைவிற்கு கப்பற்படை இல்லாததே காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, முதலாம் பியூனிக் போர் முடியும் தருவாயில் ரோமன் அரசின் கப்பற்படை மிகவும் பெரியதாகவும் உறுதியாகவும் உருவாக்கப்பட்டது.
 
==முதலாம் பியூனிக் போர் (கி.மு. 264 முதல் 241 வரை)==
 
முதலாம் பியூனிக் போர் சிசிலி மற்றும் ஆப்பிரிக்க பகுதியில் போரிடப்பட்டாலும், இந்த போர் கடற்போராகவே அமைந்தது. சைரக்கூஸ் நாட்டின் அரசன் இரண்டாம் ஹேய்ரோவிற்கும் மெசீனா கூலிப்படையினரிற்கும் நடுவே ஏற்பட்ட மோதலே முதல் பியூனிக் போரின் மூலாதாரமாக கருதப்படுகிறது. மெசீனாவிற்கு உதவிட ரோமன் அரசு தனது காலாட்படையை அனுப்பயதால் சீற்றம் கொண்ட கார்தீசிய அரசு சைரக்கூயுசிற்கு உதவியது. இதனால் இரு பெரும் அரசிற்கும், சிசிலியை எவர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்பதில் மோதல் ஏற்பட்டு அதன் விளைவாக போர் மூண்டது.
 
கி.மு.262-இல் அக்ரிஜென்தத்தில் நடைப்பெற்ற போரில் தோல்வியை தழுவியதால் கார்தீசிய அரசு, ரோமன் அரசுடன் தரைப்படையின் மோதலை தவிர்த்து, தன்னுடைய பலமான கப்பற்படையால் ரோமனை தாக்க தீர்மானித்தது
 
 
ண் ற் ந் ள்
"https://ta.wikipedia.org/wiki/பியூனிக்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது