செல்லையா இராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

04:00, 11 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai, பிறப்பு: 27 யூலை 1927[1]) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பின் முன்னாள் முதல்வரும் ஆவார்.

செ. இராசதுரை
C. Rajadurai
இலங்கை நாடாளுமன்றம்
for மட்டக்களப்பு
பதவியில்
1956–1989
முன்னையவர்ஆர். பி. கதிராமர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூலை 1927 (1927-07-27) (அகவை 96)
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி
இனம்இலங்கைத் தமிழர்

இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.[2]

அரசியலில்

இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6][7] தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]

1979 மார்ச்சில் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதனை அடுத்து இவருக்கு பிரதேச அபிவிருத்தி, மற்றும் இந்து கலாசார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.[9][10][11] பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.[12]. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.

மேற்கோள்கள்

  1. "Rajadurai, Chelliah". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. Sri Kantha, Sachi. "One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam". Tamil Nation.
  3. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  9. Rajasingham, K. T.. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DB16Df06.html. 
  10. Wickramasinghe, Wimal (15 யனவரி 2008). "Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka". தி ஐலண்டு. http://www.island.lk/2008/01/15/features1.html. 
  11. Jayawarden, Kishali Pinto (7 ஏப்ரல் 2002). "That conscience Bill coming again". சண்டே டைம்ஸ். http://www.sundaytimes.lk/020407/focus.html. 
  12. "TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna". தமிழ்நெட். 23 ஏப்ரல் 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லையா_இராசதுரை&oldid=1596937" இலிருந்து மீள்விக்கப்பட்டது