ஒர்லோவ் வைரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஒற்லோவ் வைரம் சுமார் 190 க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:10, 11 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஒற்லோவ் வைரம் சுமார் 190 காரட் (அதாவது 38 கிராம்) எடை உள்ள, தற்போது மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் உள்ள அரைக்கோள வடிவிலான ஒரு பெரிய வைரக்கல்லாகும். ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் வெட்டப்பெற்ற இவ்வைரம், திருவரங்கம் அரங்கநாதரின் (மூலவர்) கண்களாக இருந்தமையாக அறியப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், கருநாடக போர்களில் இடம்பெற்ற ஒரு பிரான்சு வீரன், இந்துவாக மதம்மாறி திட்டமிட்டு கோயிலின் கருவறைக்குள் நுழைந்து திருடி, பின்னர் மதராசில் (சென்னை) ஒரு பிரிட்டிஷ் மாலுமிக்கு விற்றான். பல அயல் நாட்டு வணிகர்களின் கைமாறி, ஆம்ஸ்டர்டமில் கிரிகோரி கிரிகொரிஏவிச் ஆர்லவ் எனும் ரஷியரால் 400,000 டச்சு ஹுல்டென் கொடுத்து வாங்கப்பட்டு, ரஷியா அரசி இரண்டாம் கத்ரினுக்கு பரிசளிக்கப்பட்டது. இதன் பின்னர் ரஷியாவின் ராஜாங்க கருவூலத்தில் காக்கப்பெற்று, இன்றளவும் ரஷியாவின் மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒர்லோவ்_வைரம்&oldid=1597170" இலிருந்து மீள்விக்கப்பட்டது