வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பல இனக்குழுக்களில் இருந்து வைணவர்கள் உள்ளனர்.
No edit summary
வரிசை 23:
விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே '''ஸ்ரீவைஷ்ணவம்''' என்ற பெயர். அன்னை தத்துவத்தை "தாயார்" என்று வைணவர்கள் அன்பொழுக அழைப்பர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தம் பேசும் [[ஸ்ரீபாஷ்யம்|ஸ்ரீபாஷ்யத்]]தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, திருமாலின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் ''அனபாயினி'' என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர். அதனாலாயே இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆசாரியனை தொழுத பின் தாயார் ஆகிய திருமகளை தொழுது பின் கோயில் மூலவரை தொழும் வழக்கமுள்ளது.
 
== வைணவத்தில் [[மோட்சம்]] ==
காண்க: [[மோட்சம்]]
 
படைத்தல் ஒரு மாயையல்ல, அது கடவுளின் ஒரு உண்மையான செய்கை. உலகப்பொருள், ஜீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. ஜீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. ஜீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையை யொட்டி அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. ஈசனுடன் ஐக்கியமாவதல்ல. அங்கு ஜீவர்களின் தனித்துவம் மறைவ தில்லை. பிறவிப் பெருங்கடலைக் கடப்பது என்பது மட்டுமே மோட்சம். மோட்சத்தை அடைவதற்கு கடவுளின் அருள் தேவை. இவ்வருளைப் பெறுவது தன்னலமற்றதும் தன்னை மறந்ததுமான பக்தியாலும் சரண்புகுதலாலும் தான் முடியும்.
வரி 32 ⟶ 33:
 
== வைணவ ஆச்சாரியர்கள் ==
 
காண்க:[[தென்கலை வைணவ ஆச்சாரியர்கள்|தென்கலை ஆச்சாரியர்கள்]], [[வடகலை வைணவ ஆச்சாரியர்கள்|வடகலை ஆச்சாரியர்கள்]]
 
புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் [[நாதமுனிகள்]] என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.
[[படிமம்:ஆழவார்கள் ஓவியம்.jpg|thumbnail|வலது|குரு பரம்பரை]]
 
சுந்தரசோழர் என்ற [[இரண்டாம் பராந்தகன்]] (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு [[ஸ்ரீரங்கம்]] கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. [http://ramanuja.org/sv/temples/srirangam/ ஸ்ரீரங்கம் கட்டுரை]
வரி 40 ⟶ 44:
 
தமிழ் பாசுரங்ளை [[சமஸ்கிருதம்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[ஒரியா]] மொழிகளில் எழுதிவைத்து அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம்,ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார். திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
 
== ஆழ்வார்கள் ==
 
== வைணவ இலக்கியங்கள் ==
 
 
== திருமண் ==
காண்க:[[வைணவ பிரிவுகள்]]
 
[[திருமண்]] இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
* வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் [[படிமம்:Vadagalai Tiruman.JPG|100px|வடகலை]]
* தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் [[படிமம்:Thengalai thiruman.jpg|100px|தென்கலை]]
 
== வடகலையும் தென்கலையும் ==
 
வேதாந்த தேசிகரும் ஆழ்வார்களின் பாசுரங்களையும், வைணவ ஆலயங்களின் பெருமைகளையும் போற்றி தமிழிலும்,சமஸ்க்ருதம், மணிப்ரவாள மொழிகளிலும் கருத்தாழமிக்க நூல்களை இயற்றியுள்ளார். மணவாளமாமுனிகள் ஆழ்வார்களின் தெள்ளிய தமிழ் பாசுரங்களுக்கு பொருளுரையிட்டு திருவரங்கத்தில் பெருமாளின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு வருட காலம் திருவிழா அனைத்தும் விட்டு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அந்த தீந்தமிழிலேயே மக்களுடன் மக்களாக அரங்கத்துறையும் இறைவனும் கேட்டு இன்புற்றனர். இதே போல் காஞ்சீபுரத்தில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலிலும் மாமுனிகள் ஒருவருட காலம் தங்கி இருந்து அவ்வூர் இறைவனிடமும், மக்களிடமும் ஆழ்வார்களின் பாசுரங்களின் பொருளை விரிவாக தமிழிலே எடுத்துரைத்தார்.
இராமானுசரும், பிள்ளை உலகாசிரியரும், வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் சமஸ்க்ருதத்திலும் பல சுவையான பாமரர்களுக்கும் விளங்கும்படி பல அருமையான பாடல்களும், காவிய நாடகங்களும் இயற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துகளையே தங்கள் நூல்களிலும், வாழ்க்கை நடைமுறைகளிலும் பின்பற்றிவந்திருக்கின்றனர். தம் தம் சீடர்களுக்கும் அவ்வாறே கற்றுக்கொடுத்துள்ளனர்.
 
இவர்கள் காலத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பழக்கமுறைகளினால் வைணவர்களில் புதிய பிரிவாக [[வடகலை வைணவம்]] தோன்றியது.
 
தமிழ்ப் பிரபந்தங்களை வேதங்களாகவே மதிக்கவேண்டும் என்பது இராமானுஜரின் போதனை. அதனால் வேதங்கள், உபநிடதங்கள் இவைகளுக்கு பதிலாகவே பிரபந்தங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கருத்து தலை தூக்கியது. இரு நூற்றாண்டுகளில் இந்த விதைக்கருத்து கொழுந்துவிட்டு மரமானபோது அது வைணவத்தையே இரு பிரிவுகளாக்கிவிட்டது. இப்படி ஏற்பட்டது தான் வடகலையும் தென் கலையும். தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது [[தென்கலை வைணவம்]].
 
[[திருக்கச்சி நம்பிகள்]], இராமானுசர், அவரின் சீடர்கள் கூரத்தாழ்வார்,முதலியாண்டான், பின்னர் வேதாந்த தேசிகர் ஆகியோர் காஞ்சீபுரம் தேவப்பெருமாள் கோயில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சார்ந்தவர்களே.
 
பிற்காலத்தில் வடகலையாருக்கு முக்கிய நகரமாக [[காஞ்சீபுரம்|காஞ்சீபுரமும்]], தென்கலையாருக்கு ஸ்ரீரங்கமுமாக இருந்ததே அவர்கள் அப்படி அழைக்கப்பட்டதற்குக் காரணம். காஞ்சீபுரத்தில் வடமொழிப் புலவர்களின் நடமாட்டம் அதிகம். ஸ்ரீரங்கமும் அதன் சுற்றுவட்டாரமும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள். இதைத்தவிர தத்துவ ரீதியாகவும் இருபிரிவுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் வேரூன்றின.
 
வடகலையார் ஸ்ரீயாகிய மகாலட்சுமியை நாராயணன் என்ற மலரிலிருந்து பிரிக்கமுடியாத அதன் மணமாகக் கொள்வர். அதனால் ஸ்ரீயும் மோட்சத்தைக் கொடுக்கக் கூடியவள். தென்கலையாருக்கோ ஸ்ரீயும் ஒரு ஜீவன் தான்; ஆனால் முக்கியமான ஜீவன். ஆண்டவனிடம் நமக்காகப் பரிந்து பேசக்கூடிய ஜீவன்.
 
மதக்கோட்பாட்டு வல்லுனர்கள் வடகலைக்கும் தென்கலைக்கும் 18 வேறுபாடுகள் சொல்வர். ஒரு சராசரி வைணவனுக்கு இந்த வேறுபாடுகள் பொருளற்றவை. ஒரே பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடம் அளவு கடந்த பக்தியும், இராமானுஜர் சொல்லியபடி எல்லா ஜீவர்களிடமும் காட்ட வேண்டிய அன்புமே அடிப்படை வைணவ லட்சணமாகும்.
 
இறைவனை வழிபடவும், ஆன்மீக அரும்பொருள்களை பாமரர்களும், எளியோரும், அந்தணர்களும் மிக எளிமையாக கற்கவும், தெரிந்துகொள்ளவும் வைணவம் நிகரற்ற சமயமாக போற்றப்படுகிறது. இறைவனைத்தொழவும்,அறிந்து கொள்ளவும், இறைத்தொண்டு ஆற்றவும், அனைத்து சாதியினருக்கும் எவ்வித தடையும் இல்லாமல் மிக்க எளியமுறையிலும்,மொழி வேற்றுமை இல்லாமலும் தூய்மையான ஆன்மீக வழியையே விசிஷ்டாத்வைதம் எனும் வைணவ சமயம் உரைத்து கடைபிடிக்க செய்கிறது. மோக்ஷம் எனப்படும் ஆன்மா முக்தியடைய எளிய முறை பாற்கடல்நாதனான நாராயணனை அடிபணிந்து வழிபடுவதே என்பது வைணவத்தின் கோட்பாடு.
 
{| class="wikitable"
|-
! வடகலை !! தென்கலை
|-
| [[திருமால்]] தெய்வம் || [[திருமகள்|திருமகளும்]] தெய்வம்
|-
| [[வேதம்|வடமொழி வேத]] வழி || [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] நூலும் போற்றப்படும்
|-
| வடக்கிலுள்ள [[திருப்பதி]]க்குத் தென்கலை நாமம். [[காஞ்சிபுரம்]] வடகலையின் மையம் || தெற்கிலுள்ள [[திருவரங்கம்]] கோயிலுக்கு வடகலை நாமம்
|}
* வைணவர் கூறும் இந்த விளக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
 
== துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வைணவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது