சுப. வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
 
== அரசியல் பணி ==
சுப. வீரபாண்டியனின் தந்தையும் தாயும் 1937 ஆம் ஆண்டு முதலே [[சுயமரியாதை இயக்கம்]], [[திராவிடர் கழகம்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்]] என அரை நூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து அரசியலில் இயங்கி வந்தனர். இதனால் இளமையிலேயே சுப. வீரபாண்டியனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும் பொழுதே திராவிட இயக்க ஆதாரவாளராக வளர்ந்தார். 1970 ஆம் ஆண்டுகளில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய தமிழ் தேசியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார்.தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனாரின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரது தென்மொழி இதழை கேடயமாக பயன்படுத்தி வந்தார். பின்னர் தியாகு நடத்திய திலீபன் மன்றத்தோடு தனது தமிழர் மன்றத்தை இணைத்து தமிழ் – தமிழ்தேசிய இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இருந்தார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சான்றோர் பேரவை என்னும் அமைப்பில் இயங்கினார். அங்கிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!! தமிழியத்தால் வெல்வோம்!!! என்னும் முழக்கத்தோடு திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை 2007 ஆம் ஆண்டில் உருவாக்கி அதன் பொதுச்செயலாளராகத் தற்பொழுது இயங்கி வருகிறார். பெரியாரைப் போற்றி, பெருஞ்சித்திரனார் வழி தமழ்த்தேசியவாதியாகவே திகழ்கிறார்.
 
== சிறை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சுப._வீரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது