இரா. முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளன. சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.
 
தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் நாவல் ஆங்கிலத்தில் ''''கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர்'''' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. தற்போது அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக ''''விஸ்வரூபம்'''' நாவலைநாவல் 2013-ல் பிரசுரமானது. அரசூர் முக்கதைகளின் (Arasoor Trilogy) அடுத்த நாவலான ‘அச்சுதம் கேசவம்’ நாவலைத் தற்போது (2014 ஜனவரி) எழுதிக் கொண்டிருக்கிறார்.
 
அறிவியல் கட்டுரை மற்றும் பத்திரிகைப் பத்திகள் இவருடைய கட்டுரையாக்கங்கள். இணையத் தளங்கள் இவர் ஆனந்தவிகடனில் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தமிழில் முதல் branded column ஆகும்.
 
தி இந்து தமிழ் பத்திரிகையில் தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார் (ஜனவரி 2014).
 
இவர் எழுதிய மூன்று நாடகங்களை ஷ்ரத்தா நாடகக் குழுவினர் 2013 நவம்பரில் அரங்கேற்றினார்கள். ‘ஆழ்வார்’, ‘சிலிக்கன் வாசல்’, ‘எழுத்துக்காரர்’ என்ற தன் மூன்று சிறுகதைகளை நாடகமாக்கியுள்ளார் இவர். ’சாவடி’ என்ற முழுநீள (120 நிமிடங்கள்) நாடகத்தை எழுதி முடித்திருக்கிறார். சென்னை துறைமுகத்தில் எம்டன் என்ற ஜெர்மன் கப்பல் குண்டு வீசித் தாக்கிய முதல் உலகப் போர் நிகழ்வின் நூறாண்டு நிறையும் 2014-ம் ஆண்டு, நூறு வருடம் முன் எம்டன் வந்த இரவு பற்றிக் கதைக்கும் அண்மைக்கால வரலாற்று நாடகம் இது.
 
மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தவர் இவர்.
வரி 46 ⟶ 50:
* லண்டன் டயரி (பயணக் கட்டுரைகள்)
* ப்ராஜக்ட் எம் (பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய முதல் தமிழ் நூல்)
* விஸ்வரூபம் (நாவல்)
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரா._முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது