தங்கப் பந்து (பிஃபா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Sepp Blatter at signing of agreement creating FIFA Ballon d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:05, 13 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஃபிஃபா பாலோன் தி'ஓர் ( FIFA Ballon d'Or,பிரெஞ்சு உச்சரிப்பு: ​[balɔ̃ dɔʁ], தங்கப் பந்து) என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் உலகின் தேசிய அணிகளின் தலைவர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓட்டளிப்பர்.

சூலை, 2010-இல் ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர். இடம்: ஜோகானஸ்பேர்க்

ஃப்ரென்ச் கால்பந்தின் பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் லியோனல் மெஸ்ஸி ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதை வென்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கப்_பந்து_(பிஃபா)&oldid=1598823" இலிருந்து மீள்விக்கப்பட்டது