உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
'''இடம்:''' சென்னை, தமிழ்நாடு

'''அகவை:''' 70 ('''பி:''' மார்ச்சு 3, 1944)

என் கருத்துக்கள் சில

'''என் தமிழ் நடை:''' சுன்னாகம் [[அ. குமாரசாமிப் புலவர்]] அவர்களின் மாணாக்கர் பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]]. அவரது மாணவரான கோப்பாய் பண்டிதர் கந்தையா எனது தமிழ் (இலக்கண, இலக்கிய) ஆசிரியர். 1958ஆம் ஆண்டு சிரேட்ட பாடசாலைத் தராதர பத்திர பரீட்சையில், ஏனைய பாடங்களை ஆங்கில மொழியில் சித்தி பெற்றிருந்தாலும், தமிழ் மொழியிலும் (Tamil Language), தமிழ் இலக்கியத்திலும் (Tamil Literature) அதிதிறமை சித்தி பெற்றமைக்காக குமாரசுவாமிப் புலவர் எழுதிய "தமிழ்ப் புலவர் சரித்திரம்" என்ற நூலை கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழாவின்போது பரிசாக கொடுத்தார்கள்.<ref>(இத்தகவலை தயக்கத்துடன் தான் எழுதுகிறேன். ஏனெனில் எனக்குத் தமிழ் கற்பித்தவரோ, புத்தகம் பரிசளித்த கல்லூரி அதிபரோ உயிரோடு இல்லை. கொடுமை என்னவென்றால் 35 வருடங்களுக்கு மேலாக நான் பாதுகாத்து வைத்திருந்த அந்தப் புத்தகமும் ஏனைய பல அரிய சேகரிப்புகளோடு 1995ஆம் ஆண்டு எனது வீடு தரைமட்டமானபோது அழிந்துபோயிற்று.)</ref>

ஆகவே நான் பயன்படுத்தும் சொற்களும், எழுதும் நடையும் புலவர் காலத்தவையாகவே இருக்கும்.
தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பு வரக்கூடிய எழுத்துக்களைக் கொண்ட சொற்களை தமிழ் சொல்லாக ஏற்றுக் கொள்ளலாம் என்பது பண்டிதமணியின் கருத்து. உதாரணத்துக்கு, காகம் என்ற சொல்லில் நடுவே வரும் க எழுத்து ஹ என ஒலிப்பதால் காகம் தமிழ்ச் சொல் அல்ல என்றும் காக்கை என்பதே தமிழ்ச் சொல் என்றும் கூறியிருப்பதாக பண்டிதர் தமிழ் கற்பிக்கும்போது கூறினார். அந்த வகையில் சரித்திரம், உதாரணம் என்பவை தமிழ்ச் சொற்களே. அப்படியிருக்க அவற்றை ஏன் வரலாறு, எடுத்துக் காட்டு என மாற்றினார்கள் என்பது தெரியவில்லை.

'''சொற்களை பிரித்து எழுதுதல்பிரித்தெழுதுதல்'''

சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களைப் பிரித்து எழுத வேண்டுமென தமிழ் விக்கியில் ஒரு கருத்து இருக்கிறது. அது நல்லது. ஆனால் சொற்களை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதற்கு வரையறை உண்டு. ''வண்டியிலிருந்து இறங்கினான்'' என்பதற்கும் ''வண்டியில் இருந்து இறங்கினான்'' என்பதற்கும் பொருள் வேறுபடும். ஆனால் பொருளுணர்ந்து என்பதை பொருள் உணர்ந்து என பிரிக்கலாம்.
விக்கி செய்தித்தாள் அல்ல. கல்வியறிவு உள்ளவர்களே விக்கியை படிக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் playing to the gallery வேண்டாமே என்பது என் எண்ணம். படிக்க வருபவர்கள் படித்துவிட்டுச் செல்லும்போது அறிந்த தகவலுடன் தங்கள் தமிழ் அறிவையும் கொஞ்சம் மேம்படுத்திக் கொள்ளட்டுமே!

'''ஒள, ஐ எழுத்துக்கள் பயன்படுத்தல்'''

சிலர் ஒள எழுதுவதற்குப் பதிலாக "அவ்" என எழுதுகிறார்கள். ஒளடதம் என்றால் அவுடதம் என எழுதுகிறார்கள். அவர்கள் ஒளவைப்பாட்டியை அவ்வைப்பாட்டி என எழுதுவார்களா? எழுதினால் எவ்வளவு அபத்தம்! அதே போல சிலர் ஐயா என்பதை அய்யா என்றும், ஐயர் என்பதை அய்யர் என்றும் எழுதுகிறார்கள். ஒள, ஐ தமிழ் எழுத்துக்கள் இல்லையா?

'''ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தல்'''

ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதும்போது சிலர் வசனம் வசனமாக மொழிபெயர்த்து எழுதுவதுண்டு. அப்படி எழுதுவதால் கருத்து தமிழாக்கப் பட்டாலும் வசன நடை ஆங்கில நடையாக இருக்கிறது. ஆதனால் இந்தக் காலத்தில் படிப்பவர்கள் பலர் தமிழில் படித்தாலும் ஆங்கில நடையில் படித்து பழகிக் கொண்டு வருகிறார்கள். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பது என் கருத்து. நான் ஆங்கில கட்டுரையை முழுவதுமாக (அல்லது பந்தி பந்தியாக) படித்து அதிலுள்ள தகவலை உள்வாங்கிக் கொண்டு பின் தமிழ் கட்டுரையாக தமிழ் நடையில் எழுதுகிறேன்.

'''தமிழ் விக்கியில் கிரந்த எழுத்து பயன்பாடு கொள்கை:'''
தவிர்க்க முடியாத பிறமொழிப் பெயர்ச் சொற்களை முடியுமான போது, கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி அவற்றின் ஒலிப்பு சிதையாமல் எழுதவேண்டும் என்பது இப்பயனரின் கொள்கையாகும். (உ-ம்) ஸ்டாலின், கிறிஸ்மஸ், புஷ் ஹவுஸ் (Bush House), ஜலந்தர் போன்றவை.

{{reflist}}

'''தமிழ் விக்கியில் கிரந்த எழுத்து பயன்பாடு கொள்கை:''' தவிர்க்க முடியாத பிறமொழிப் பெயர்ச் சொற்களை முடியுமான போது, கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி அவற்றின் ஒலிப்பு சிதையாமல் எழுதவேண்டும் என்பது இப்பயனரின் கொள்கையாகும். (உ-ம்) ஸ்டாலின், கிறிஸ்மஸ், புஷ் ஹவுஸ் (Bush House), ஜலந்தர் போன்றவை.

==என் பங்களிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Uksharma3" இலிருந்து மீள்விக்கப்பட்டது