புன்வெற்றிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Plant cell structure svg vacuole.svg|thumb|300px|தாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 19:
 
தாவரங்களிலும், பூஞ்சைகளிலும் விலங்குகளில் இருப்பதைப் போல முறையான கழிவகற்றும் தொகுதி காணப்படாமையால் அனுசேபத்தின் போது வெளியிடப்படும் கழிவுகள் கலத்தினுள்ளேயே சேமிக்க வேண்டும். இவ்வடிப்படையில் தாவர மற்றும் பூஞ்சைக் கலங்களில் புன்வெற்றிடம் மிகவும் முக்கியமானதாகும்.
 
==தாவரக் கலத்தில் புன்வெற்றிடம்==
 
விருத்தியடைந்த தாவரக் கலத்தில் 30% தொடக்கம் 80%க்கும் மேற்பட்ட கனவளவை புன்வெற்றிடம் உள்ளடக்கியிருக்கும். இதன் கனவளவே இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. தாவரப் புன்வெற்றிடத்தை உருவாக்கும் மென்சவ்வு '''இழுவிசையிரசனை''' எனப்படுகின்றது. இதனைப் புன்வெற்றிட மென்சவ்வு எனவும் அழைப்பர். கலச்சாற்றிலிருந்து புன்வெற்றிடத்திற்கு கலத்தின் அமிலத்தன்மையைக் குறைப்பதற்காக H<sup>+</sup> அயன்கள் கடத்தப்படுவதால் புன்வெற்றிடச் சாறு குறைவான pH பெறுமானத்தைக் கொண்டிருக்கும். இவ்வமிலத்தன்மை நொதியங்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றது; கரையங்களைக் கடத்தவும் பயன்படுகின்றது. பொதுவாக முதிர்ச்சியடைந்த தாவரக் கலத்தில் அதிக கனவளவைப் பிடித்திருக்கும் ஒரு தனி புன்வெற்றிடம் காணப்படும். வளர்ந்து கொண்டிருக்கும் முதிர்ச்சியடையாத தாவரக் கலத்தில் பல சிறிய புன்வெற்றிடங்கள் காணப்படலாம்.
 
புன்வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் நீர் கலச்சுவருக்கு எதிராக நீர்நிலையியல் அமுக்கத்தைக் கொடுக்கின்றது. இவ்வமுக்கம் தாவரத்தை வாடாமல் விறைப்புத்தன்மையுடன் பேண உதவுகின்றது. இதனாலேயே நீரூற்றப்படாத தாவரங்களும், [[பிரசாரணம்]] மூலம் நீரகற்றப்பட்ட தாவரங்களும் புன்வெற்றிடம் மூலம் கொடுக்கப்படும் அமுக்கம் குறைவடைவதால் வாட்டமடைகின்றன.
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/புன்வெற்றிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது